நாயகனாக அறிமுகமாகும் நடன இயக்குனர் தினேஷ்!…

சென்னை:-ஃபிலிம் பாக்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் படம் ‘ஒரு குப்பைக் கதை.’ இப்படத்தின் மூலம் இயக்குனர் அஸ்லம் தயாரிப்பாளராகிறார். இவர் ஸ்ரீகாந்த் நடித்த ‘பாகன்’ படத்தினை இயக்கியவர். நடன இயக்குனர் தினேஷ் இப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகிறார். இவர் ஏறக்குறைய 130 படங்களுக்கு மேல் நடன இயக்குனராக பணியாற்றி இருக்கிறார். அதுமட்டுமின்றி, ‘ஆடுகளம்’ படத்திற்காக இவர், தேசிய விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதோடு படத்தையும் அறிமுக இயக்குனர் காளிரங்கசாமி என்பவர்தான் இயக்குகிறார். இவர் இயக்குனர் எழிலிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றியவர். மேலும் ‘பாகன்’ படத்தில் அஸ்லம் அவர்களிடம் இணை இயக்குனராகப் பணியாற்றியுள்ளார் காளிரங்கசாமி. ‘ஆதலால் காதல் செய்வீர்’, ‘வழக்கு எண் 18/9′ படத்தில் நடித்த மனீஷா யாதவ் கதாநாயகியாக நடிக்கிறார். யோகி பாபு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மகேஷ்முத்துசாமி ஒளிப்பதிவு செய்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘காதல்’ படத்தின் இசையமைப்பாளார் ஜோஷ்வா ஸ்ரீதர் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

நாயகனாக அறிமுகமாவது பற்றி தினேஷ் கூறும்போது, மிக அழுத்தமான எனக்கும் பொருத்தமான கதை என்பதால் இதில் நடிக்க ஒப்புக் கொண்டேன். இதற்கு முன் நிறைய பேர் என்னை நடிக்க அழைத்தபோதெல்லாம் மறுத்துவிட்டேன். ஆனால் இந்தக் கதை என்னை நடிப்புக்குள் இழுத்து வந்துவிட்டது. நடனத்தையும் தொடர்ந்து கொண்டு, கிடைக்கிற இடைவெளியில் இந்த படத்தில் நடிக்கவிருக்கிறேன். தினேஷ் மாஸ்டர் இனிமே ஹீரோவாகத்தான் நடிப்பேன்னு அடம் பிடிக்கிறார்னு கொளுத்திப் போட்டா யாரும் நம்பிடாதீங்க. நமக்கு டான்ஸ் பொழப்பு ரொம்ப முக்கியம் பாஸ் என்றார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago