அதன்பேரில் மும்பை போலீசார் நெஸ்வாடியா மீது வழக்குப்பதிவு செய்தனர். இதில் பிரீத்திஜிந்தாவிடம் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக போலீசார் மும்பைக்கு வரவழைத்தனர். இதையடுத்து அவர் அமெரிக்காவில் இருந்து மும்பை திரும்பி போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார்.அதில் நெஸ்வாடியா தன்னிடம் தவறாக நடந்து கொண்டது பற்றி விவரித்தார். மேலும் சம்பவத்தின் போது உடன் இருந்த 17 பேர் பெயர் விவரங்களையும் பிரீத்தி ஜிந்தா குறிப்பிட்டு இருந்தார். அவர்கள் ஒவ்வொருவரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வாக்கு மூலம் பதிவு செய்து வருகிறார்கள்.
பிரீத்தி ஜிந்தா குறிப்பிட்ட 17 பேரில் 2 பேர் வெளிநாட்டினர். அவர்கள் வாக்குமூலத்தை இமெயில் மூலம் மும்பை போலீசுக்கு அனுப்பி உள்ளனர். இதுதவிர மேலும் 9 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. இன்னும் 6 பேரிடம் வாக்கு மூலம் பெறவேண்டி உள்ளது. அனைவரிடமும் வாக்குமூலம் பெறப்பட்ட பிறகு போலீசார் அடுத்தகட்ட நடவடிக்கையில் இறங்குவார்கள்.இதற்கிடையே நடிகை பிரீத்தி ஜிந்தா நேற்று மும்பை போலீஸ் கமிஷனர் ராகேஷ்மரியாவை சந்தித்து புதிய புகார் மனு கொடுத்தார். அதில் நெஸ்வாடியா கடந்த 2013ல் பெங்களூரில் ஐ.பி.எல்.அணிகள் ஏலம் நடந்த போது ஒரு தடவையும், மும்பை ஸ்டேடியத்தில் இரு முறையும் என்னிடம் தவறாக நடந்து கொண்டார் என்று தெரிவித்துள்ளார்.மேலும் முக்கிய வேலையாக அமெரிக்காவுக்கு தான் செல்ல வேண்டி இருப்பதால் அதற்கு அனுமதிக்குமாறும் போலீஸ் கமிஷனரிடம் பிரீத்தி ஜிந்தா கேட்டுக் கொண்டார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே