அதோடு, முந்தைய படத்தில் கிராமத்து பெண்ணாக நடித்த ஸ்ரீதிவ்யாவுக்கு இதில் மாடர்ன் கேர்ள் வேடம். அதனால், அதர்வாவுடன் நடித்துள்ள ஈட்டி படத்தை விடவும் இப்படத்தில் கவர்ச்சிக்கதவுகளை கூடுதலாக திறந்துவிட்டுள்ளார். மேலும், காதலை வெளிப்படுத்தும் ஒரு உருக்கமான காட்சியில் இருவரும் முத்தம் கொடுத்துக்கொள்வது போல் படமாக்கினாராம் இயக்குனர்.அப்போது, சிவகார்த்திகேயனுககு முத்தம் கொடுக்க ஸ்ரீதிவ்யா தயாராகி விட்டபோதும், சிவா தான், என் படத்தை இளசுகளாக பார்க்கிறார்கள். நான் முத்தம் கொடுத்தால் பின்னர் அவர்களும் அதை பின்பற்றுவார்கள். அதனால் அவர்கள் கெட்டுப்போவதற்கு நானே காரணமாகி விடுவேன் என்று மறுத்துள்ளார்.
ஆனபோதும், ஸ்ரீதிவ்யா விடவில்லையாம். காதலை சொல்ல முத்தம் கொடுப்பது ஒன்றும் தவறில்லை. நீங்கள் கொடுக்கவில்லை என்றால் நான் கொடுக்கிறேன் என்று சொன்னாராம். அதனால், டைரக்டருக்கு ரொம்ப சந்தோசமாக விட்டதாம். அதையடுத்து, ஸ்ரீதிவ்யாவே சிவகார்த்திகேயனுக்கு முத்தம் கொடுப்பதுபோன்று படமாக்கியிருக்கிறார். இந்த சேதி படத்தின் தயாரிப்பாளர் தனுசுக்கு சென்றபோது, ஸ்ரீதிவ்யாவுக்கு ஸ்பெசல் தேங்க்ஸ் சொல்லி மெசேஜ் பண்ணியிருக்கிறார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே