இதையடுத்து விமான நிலைய பாதுகாப்பு படையினர் உஷார்படுத்தப்பட்டனர். மத்திய தொழில் பாதுகாப்பு படையினருடன் தீவிரவாத தடுப்பு படையினரும் விமான நிலையத்தைச் சுற்றி குவிக்கப்பட்டுள்ளனர். வாகன சோதனையும் கடுமையாக்கப்பட்டுள்ளது. விமான பயணிகளும் தீவிரமாக சோதிக்கப்படுகிறார்கள். பயணிகளின் உடமைகளை ஸ்கேனிங் செய்வதில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது.
இதற்கிடையே தாக்குதல் மிரட்டல் விடுத்தது யார் என்று போலீசார் விசாரணையில் இறங்கினர். இதில் சவுதி அரேபியாவில் இருந்து போன் வந்து இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.
மொத்தம் 4 போன்கால்கள் வந்தன. அதில் 3 மலையாளத்திலும், ஒன்றில் இந்தியிலும் பேசினான் என்று கொச்சி விமான நிலைய இயக்குனர் ஏ.கே.சி. நாயர் தெரிவித்தார்.கொச்சிக்கு வந்த மிரட்டலைத் தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கூடுதல் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் தீவிர சோதனை செய்யப்படுகின்றனர். வாகனங்களை போலீசார் பரிசோதனை செய்கின்றனர்.
காரில் கொண்டு வரப்படும் பொருட்கள், பயணிகளின் உடமைகள் மிகுந்த சோதனைக்கு பிறகு அனுமதிக்கப்படுகின்றன.பிரதமர் நரேந்திர மோடி நாளை சென்னை விமான நிலையம் வழியாக ஸ்ரீ ஹரிகோட்டாவிற்கு செல்கிறார். ராக்கெட் ஏவும் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்று விட்டு 30ம் தேதி சென்னை திரும்புகிறார்.2 நாட்கள் அவர் சென்னை விமான நிலையம் வழியாக பயணம் மேற்கொள்வதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.நரேந்திர மோடி வருகை மற்றும் விமான நிலைய தாக்குதல் மிரட்டல் போன்ற காரணத்தால் சென்னை விமான நிலையம் தமிழக போலீஸ் மற்றும் மத்திய தொழிற் பாதுகாப்பு படை வீரர்கள் மூலம் கண்காணிக் கப்படுகின்றன. பிரதமர் வந்து செல்லும் வரை விமான நிலைய பாதுகாப்பு ஏற்பாட்டை தமிழக போலீசார் ஏற்றுள்ளனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே