ராம் கோபால் வர்மா எதையாவது பேசி வம்பில் மாட்டிக் கொள்ளும் பழக்கமுடையவர். தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், சிரஞ்சீவி, ரஜினிகாந்த் இப்படி யாரைப் பற்றியாவது எதையாவது கருத்து சொல்லிக் கொண்டேயிருப்பார். சமீபத்தில் கூட ‘கோச்சடையான்‘ படத்தைப் பற்றி அவர் அடித்த கமெண்ட் பலத்த எதிர்ப்புகளைப் பெற்றது.
சமீபத்தில் அவர் இயக்கியுள்ள ‘ஐஸ் க்ரீம்’ படத்திற்கான பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்ற போது, ஒரு பத்திரிகையாளர் படத்தின் பெயர் ‘Ice Cream’-ஆ அல்லது ‘Eyes Cream’-ஆ எனக் கேட்டிருக்கிறார். அதற்கு பதிலளித்த ராம்கோபால் வர்மா, நான் பத்திரிகையாளர்களை ஊமைகள் என நினைத்திருந்தேன்.
ஆனால், இப்போதுதான் அவர்கள் படிக்காதவர்கள் என புரிகிறது, என்று பதிலளித்துள்ளார். இன்னொருவர் கேட்ட கேள்விக்கு கசப்பான, அருவெறுப்பான பதில் சொல்லியிருக்கிறார். இவை பத்திரிகையாளர்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தின. அதனால், இனி ராம் கோபால் வர்மா சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில்லை என முடிவெடுத்திருக்கிறார்களாம்.இது பற்றி வர்மாவுக்கு நெருக்கமான ஒருவர், பத்திரிகையாளர்கள் இப்படியெல்லாம் கேள்வி கேட்டால், அவர் அப்படித்தான் பதில் சொல்வார் என்று சொல்லியிருக்கிறார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே