பேஸ்புக் எதிர்கால கணக்குகளுடன் புதிய வசதிகளை அறிமுகம் செய்து வருவதுடன் தனக்கு வலு சேர்க்ககூடிய இணைய நிறுவனங்களையும் செயலிகளையும் கையகப்படுத்தி வருகிறது. இளைய தலைமுறையை கவர்ந்த வாட்ஸ் அப் செயலியை ஃபேஸ்புக் வாங்கியதும், அதனைத் தொடர்ந்து மெய்நிகர் சேவையான ஆக்குலஸ் ரிஃப்ட் நிறுவனத்தை ஃபேஸ்புக் வாங்கியதும் இணைய உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம். இடையே, தானாக அழையும் செய்திகளை அனுப்ப உதவும் ஸ்னேப்சேட் செயலியை ஃபேஸ்புக் வாங்க முற்பட்டதும், அதற்கு 3 பில்லியன் டாலர் தருவதாக கூறியும் கூட ஸ்னேப்சேட் அதை ஏற்க மறுத்ததும் இணைய உலகில் வியப்புடன் பேசப்பட்டது.
இதற்கு சில ஆண்டுகளுக்கு முன்னரே ஃபேஸ்புக், குறும்பதிவு சேவையான ட்விட்டரை விலைக்கு வாங்க முயன்றிருக்கிறது. இந்த தகவலை ட்விட்டர் இணை நிறுனரான பிச் ஸ்டோன், ஸ்கை நியூஸ் பேட்டியில் கூறியுள்ளார். ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜக்கர்பர்கே தொடர்பு கொண்டு ட்விட்டரை வாங்க விரும்புவதாக கூறியதாகவும், உடனே மனம் போன போக்கில் 500 மில்லியன் டாலர் விலை சொன்னதாகவும் ஸ்டோன் தெரிவித்துள்ளார்.இந்த விலையை கேட்டு ஜக்கர்பர்க் தானாக விலகி விடுவார் என எதிர்பார்த்ததற்கு மாறாக, அவர் அந்த விலையை தர தயாராக இருப்பதாக மறு நாள் கூறிய போது ட்விட்டர் நிறுவனர்கள் ஸ்டோன் மற்றும் இவான் வில்லியம்ஸ் அதிர்ச்சியும் ஆச்சர்யமும் அடைந்திருக்கின்றனர். ஆனால், நிறுவனம் வளரும் நிலையில் தான் உள்ளது எனக் கூறி ஜக்கர்பர்க் கோரிக்கையை நிராகரித்து விட்டனர். இன்று ட்விட்டரின் மதிப்பு. 23 பில்லியன் டாலர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே