நடிகர் விஜய்யின் பிறந்தநாளில் ரத்ததானம் செய்யும் ரசிகர்கள்!…

சென்னை:-நடிகர் விஜய் பிறந்த நாள் விழா நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஏழைகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்க ரசிகர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.காஞ்சீபுரம் கிழக்கு மாவட்ட விஜய் மக்கள் இயக்க இளைஞர் அணி தலைவர் இ.சி.ஆர். சரவணன் தலைமையில் நீலாங்கரையில் நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

அங்குள்ள சக்தி மாரியம்மன் கோவிலில் 140 தேங்காய் உடைத்து சிறப்பு பூஜை செய்யப்படுகிறது. சுகன்யா திருமண மண்டபத்தில் 140 ரசிகர்கள் ரத்ததானம் செய்கிறார்கள். இலவச கண் பரிசோதனை முகாம் நடக்கிறது. மாற்றுதிறனாளிக்கு மூன்று சக்கர சைக்கிள் வழங்கப்படுகின்றன. 40 பேருக்கு வேட்டியும், 40 பேருக்கு புடவையும் வழங்கப்படுகிறது.மதியம் 12 மணிக்கு 440 பேருக்கு பிரியாணி விருந்து வழங்கப்படுகிறது. 40 மரக்கன்றுகள் நடப்படுகின்றன. இனிப்பும் வழங்கப்படுகிறது.அகில இந்திய விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர் ஆனந்த், நிர்வாகிகள் ரவிராஜா, ராஜேந்திரன், ஏ.சி. குமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்கின்றனர்.எம்.ஆர். செந்தில், ஜி.தனசேகர், யுவராஜ், டி.தமீம், வி.தினேஷ், விஜய் தியாகு, ஜெ.குமரன், பாலாஜி, நரசிம்மபாபு, எஸ்.எஸ். சரத், இ.சி.ஆர். மதன், ஏ.சுரேஷ், ஆர்.சந்தோஷ் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

தென் சென்னை தெற்கு மாவட்ட விஜய் மக்கள் இயக்க தலைவர் திருவான்மியூர் கே.வி. தாமு தலைமையில் 100 பேர் ரத்ததானம் செய்கிறார்கள். காக்கும் கரங்கள் இல்லத்தில் அன்னதானம் மற்றும் 5 இடங்களில் விஜய் மக்கள் இயக்க பெயர் பலகைகள் திறப்பு நிகழ்ச்சிகள் நடக்கின்றன. விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர் ஆனந்த் பங்கேற்கிறார். மாவட்ட நிர்வாகிகள் கே.வி. ஆனந்த், டி. திருமலை, மயிலை ஆர்.மகேஷ், பி.அரிபாபு, எம்.எஸ். எஸ். சூர்யா, கே.சுனில், டி.கே. ரமேஷ், ஆர். அருண் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.வட சென்னை மாவட்ட விஜய் மக்கள் இயக்க தலைவர் கட்பீஸ் விஜய் ஏற்பாட்டில் ராயபுரம் ஆர்.எஸ்.ஆர்.எம். மருத்துவமனையில் நாளை பிறக்கும் 25 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்படுகிறது. ஏழை பெண்களுக்கு புடவையும் வழங்கப்படுகிறது.

திருவள்ளூர் தெற்கு மாவட்ட விஜய் மக்கள் இயக்க தலைவர் அம்பத்தூர் ஜி.பாலமுருகன் தலைமையில் மாதவரத்தில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளும் போரூரில் முதியோருக்கு சாப்பாடும் வழங்கப்படுகிறது. ரத்ததானமும் நடக்கிறது.தென் சென்னை தெற்கு மாவட்ட விஜய் மக்கள் இயக்க தலைவர் தி.நகர் க.அப்புனு தலைமையில் கோடம்பாக்கம் மற்றும் திருவல்லிக்கேணி பிரசவ ஆஸ்பத்திரியில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்படுகிறது. தி.நகரில் ரத்ததானம் நடக்கிறது. நிர்வாகிகள் ராயப்பேட்டை சி.சண்முகம், திருவல்லிக்கேணி சந்திர குமார், மாம்பலம் கோபி, கே.கே.நகர் வெங்கடேஷ், தியாகு, ராஜ், மகி ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.மத்திய சென்னை மாவட்ட விஜய் மக்கள் இயக்க தலைவர் பூக்கடை எஸ்.குமார் தலைமையில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

2 years ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

2 years ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

2 years ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

2 years ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

3 years ago