சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் ‘டெபாசிட்’ செய்துள்ள கறுப்பு பணத்தை மீட்க வேண்டும் என்று இந்தியாவில் உள்ள எதிர்க்கட்சிகள், கடந்த பல ஆண்டுகளாக குரல் கொடுத்து வருகின்றன. தற்போது ஆட்சிப்பொறுப்பு ஏற்றுள்ள பாரதீய ஜனதா கட்சி, வெளிநாட்டு வங்கிகளில் உள்ள இந்தியர்களின் கறுப்புப்பணத்தை மீட்க நடவடிக்கை எடுக்க தொடங்கி உள்ளது.இதற்காக முதல் கட்டமாக ‘சிறப்பு விசாரணைக்குழு’ அமைத்துள்ளது.
இந்நிலையில் சுவிஸ் தேசிய வங்கியின் மத்திய குழு, வங்கி விதிகளுக்கு உட்பட்டு நேற்று ஒரு புள்ளிவிவர பட்டியலை வெளியிட்டது. அதன்படி இந்தியர்களின் ‘டெபாசிட்’ கடந்த ஆண்டைவிட 40 சதவீதம் அதிகரித்து, ரூ.14 ஆயிரம் கோடியை தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2006-ம் ஆண்டில் இந்தியர்களின் ‘டெபாசிட்’ அதிகபட்சமாக ரூ.49 ஆயிரம் கோடி என்றும் அதுவே 2010-ம் ஆண்டில் ரூ.28 ஆயிரம் கோடியாக குறைந்தது என்ற விவரமும் தெரிவிக்கப்பட்டது.சுவிஸ் வங்கிகளில் அமெரிக் கர்களின் ‘டெபாசிட்’ தொகையும் அதிகரித்துள்ளது. அதாவது 2013-ம் ஆண்டு இறுதி நிலவரப்படி ரூ.27½ லட்சம் கோடியாக (193 சுவிஸ் பிராங்க்ஸ்) உயர்ந்துள்ளது.உலக நாடுகளின் எதிர்ப்புகளால் 2012ம் ஆண்டில், சுவிஸ் வங்கிகளில் ‘டெபாசிட்’ வெகுவாக குறைந்தது. தற்போதைய நிலவரப்படி இந்தியா, அமெரிக்கா தவிர மற்ற நாடுகளில் இருந்து செய்யப்படும் ‘டெபாசிட்’ குறைந்துள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே