இந்த அமைப்பானது, விண்வெளி வீரர் மற்றும் எழுத்தாளருமான கார்ல் சகன் என்பவருடன் இணைந்து தொடங்கப்பட்டது. இரு நோபல் பரிசு வென்றவர்களும் இங்கு பணியாற்றியுள்ளனர். சொஸ்தக் இத்தகைய கணிப்பை தெரிவிப்பதற்கு ஏற்ப எஸ்.ஈ.டி.ஐ. அமைப்பில் புதிய ஆச்சரியமூட்டும் கருவிகள் உள்ளன. அவை ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கி மற்றும் கெப்ளர் விண்வெளி ஆய்வு செயற்கை கோள் ஆகியவை ஆகும். நாசாவால் விண்வெளிக்கு செலுத்தப்பட்டு உள்ள கெப்ளர் இதுவரை 72 நட்சத்திர கூட்டங்களில் உள்ள 962 வேற்று கிரகங்கள் கண்டறியப்பட்டு உள்ளன.அவற்றில் கெப்ளர்-10சி ஒன்றாகும். இது பூமியை போன்று 17 மடங்கு எடை கொண்டது.
இந்த மாதம் தலைப்பு செய்திகளில் வெளிவந்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. கெப்ளர் தொலைநோக்கி 2,900 கண்டுபிடிப்புகளை கண்டறிய சாத்தியம் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இது கடந்த 2009ம் ஆண்டில் இருந்துதான் செயல்பட தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே, பூமியை போன்ற கிரகங்கள் ஏராளமாக உள்ளன என்பதை இது காட்டுகிறது (அவற்றில் ஆய்வாளர்கள் தெரிவிக்கும் உயிர் வாழும் பண்புகள் கொண்ட கிரகங்களும் இருக்க கூடும்). கெப்ளர் கண்டுபிடிப்புகளால் பூமியை தவிர்த்து 40 பில்லியன் கிரகங்கள் பால்வழி மண்டலத்தில் இருக்க கூடும். எனவே, அவற்றில் வேற்று கிரகவாசிகள் வாழும் சூழலுக்கான வாய்ப்பும் உள்ளது. பூமியின் வரலாற்றில் உயிர் என்றால் பாக்டீரியா, அமீபா மற்றும் ஆல்கா ஆகியவற்றையும் குறிக்கும்.
இவை வேற்று கிரகங்களிலும் இருக்க கூடும். எனவே, இந்த அமைப்பானது, வேற்று கிரக வாசிகளின் வாழ்க்கை குறித்த தேடலுடன், அவர்களின் வாழ்க்கை முறையின் தேடலிலும் ஈடுபட்டு உள்ளது. இதனால், அவர்கள் நம்முடன் தொடர்பு கொள்ள முடியும். பூமியை போன்ற கிரகங்களை குறித்த தேடலில், ரேடியோ அலைகள் குறித்தும் கவனத்தில் கொண்டுள்ளது. இதுபோன்று எம்.ஈ.டி.ஐ. எனப்படும் வேற்று கிரகவாசிகளுடன் தகவல் பரிமாறி கொள்ளும் திட்டமும் உருவாக்கப்பட்டு உள்ளது. இது கவனித்தலுடன், அதிக சத்தத்துடன் கத்துதல், நம்மை குறித்து அறிவித்தல், எங்கு உள்ளோம் என தெரிவித்தல் ஆகியவற்றையும் குறிக்கும். எனினும், இந்த வேற்று கிரகவாசிகள் நம்மை எப்படி பார்க்கும் என ஆய்வாளர்கள் ஆச்சரியத்தில் உள்ளனர். நாம் பசுவை பார்ப்பது போன்று நம்மிடம் இருந்து புரத சத்தை எடுத்து கொள்வது போன்றோ அல்லது கொசுவை போன்றோ இருக்க கூடும் என்பது குறித்து நமக்கு தெளிவாக தெரியவில்லை என்றும் இது நடைபெறுவது எப்பொழுது என்பது தெரியவில்லை என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே