டீன் ஏஜ் வயதில் உள்ள இரண்டு மகள்களுக்கு அப்பாதான் இந்த படத்தின் நாயகன். அம்மாதான் படத்தின் நாயகி. மலையாளத்தில் மோகன்லாலும், மீனாவும் மிகவும் பொருத்தமாக நடித்து அனைத்து ரசிகர்களின் பாராட்டையும் பெற்றனர். மற்ற மொழிகளில் இதற்குப் பொருத்தமான நடிகரைத் தேர்வு செய்து கொஞ்சம் கடினமாக இருந்ததாம். ஏனென்றால், இரண்டு மகள்களுக்கு அப்பாவாக நடிக்க யார் முன் வருவார்கள் என்பது சந்தேகமாக இருந்ததாம்.
தெலுங்கில் படத்தைத் தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் கமல்ஹாசனிடம் இது பற்றி பேசிக் கொண்டிருந்த போது, அவர்தான் தெலுங்கில் வெங்கடேஷ் நடித்தால் நன்றாக இருக்கும், அவரிடம் பேசுங்கள் என்று சொல்லியிருக்கிறார். கமல்ஹாசன், சிபாரிசு செய்த விஷயத்தை வெங்கடேஷிடமும் சொல்லியிருக்கிறார்கள். அவர் சொன்னால் சரியாக இருக்கும் என வெங்கடேஷும் நடிக்க சம்மதித்திருக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பின் தெலுங்கின் வெற்றிகரமான ஜோடியான வெங்கடேஷும், மீனாவும் மீண்டும் இந்த படம் மூலம் இணைந்து நடித்துள்ளார்கள். இதுவே படத்திற்கு மிகவும் பொருத்தமாக அமைந்துள்ளதாம். ஸ்ரீப்ரியா இயக்கியுள்ள இந்த படம் அடுத்த மாதம் தெலுங்கில் வெளியாக உள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே