இதன்படி கடந்த 7ம் தேதி கொச்சி அருகேயுள்ள ஆலுவா செயின்ட் ஜூட் சர்ச்சில் நிச்சயதார்த்தம் நடத்தப்பட்டதாக தகவல் வெளியானது. இருவரும் சர்ச்சில் மோதிரத்தை மாற்றிக் கொண்ட படங்களும் வெளியானது.இந்நிலையில், நடிகை அமலாபாலின் தந்தை பால் வர்கீஸ் மறுத்துள்ளார். இது தொடர்பாக அவர் எர்ணாகுளம் பிஷப்புக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: என்னுடைய மகள் அமலாபால் ஆலுவா செயின்ட் ஜூட் ஆலயத்தின் அருகேயுள்ள வீட்டில்தான் பிறந்து வளர்ந்தார். எனவே, அவர் சிறு வயது முதலே இந்த சர்ச்சுக்குத்தான் சென்று வருகிறார். எந்த நிகழ்ச்சி நடந்தாலும் அவர் இந்த சர்ச்சில் சென்று பிரார்த்திப்பது உண்டு. அவர் திருமணத்திற்கு முன் சர்ச்சுக்கு சென்று பிரார்த்தனை செய்ய தீர்மானித்தார். இதன்படி கடந்த 7ம் தேதி சர்ச்சில் பிரார்த்தனை மட்டுமே நடத்தினார்.
கத்தோலிக்க மரபுபடி திருமண நிச்சயதார்த்தமோ வேறு நிகழ்ச்சியோ நடக்கவில்லை. சர்ச்சில் பிரார்த்தனை 10 நிமிடம் மட்டுமே நடந்தது. சர்ச்சில் எனது மகளின் நிச்சயதார்த்தம் நடந்ததாக பத்திரிகைகளில் வந்த தகவல் தவறானதாகும் இவ்வாறு அவர் கூறியுள்ளார். அமலாபாலும், விஜய்யும் வெவ்வேறு மதங்களை சேர்ந்தவர்கள் என்பதால், திருமணத்தில் புதிய சிக்கல் எழுந்துள்ளதாக தெரிகிறது. எனினும், திருமணத்திற்கு தடை ஏதுமில்லை என இருதரப்பினரும் கூறுகின்றனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே