அத்தியாயம் (2014) திரை விமர்சனம்…

நாயகிகள் வர்ஷாவும், சமீராவும் சிறுவயது முதலே நெருங்கிய தோழிகள். சமீரா எந்தவொரு பொருளை தேர்வு செய்தாலும், அது தரமானதாக இருக்கும் என்ற கண்ணோட்டத்தில் வாழ்பவள் வர்ஷா.இந்நிலையில், நாயகன் சரணை காதலித்து வருகிறாள் சமீரா. சமீராவின் காதலன் என்று தெரிந்தும் நாயகன் மீது வர்ஷா ஒரு கண் வைக்கிறாள். நாயகன் சரணோ பெண்களுடன் சுற்றித் திரியும் ஜாலி பேர்வழி. வர்ஷா தன்னை பார்க்கிறாள் என்றதும் நாயகனும் அவளுடன் நெருங்கி பழகுகிறான்.

ஒருநாள் இவர்கள் அறையில் தனிமையில் இருக்கும்போது சமீரா பார்த்துவிடுகிறாள். கோபமைடந்த அவள், அவர்களை திட்டி தீர்த்ததோடு மட்டுமல்லாமல், தற்கொலை செய்யப்போகிறேன் என்று மிரட்டுகிறாள். என்னுடைய தற்கொலைக்கு நீங்கள்தான் காரணம் என்று எழுதி வைத்துவிட்டு இறந்துபோவேன் என்றும் மிரட்டிவிட்டு சென்றுவிடுகிறாள். இவளது மிரட்டலை கண்டு பயந்துபோன வர்ஷாவும், நாயகனும் என்னசெய்வதென்று விழிக்கின்றனர். இறுதியில் சமீராவை சமாதானப்படுத்தவது என முடிவு செய்து அவளைத் தேடி பாண்டிச்சேரிக்கு பயணமாகிறார்கள்.பாண்டிச்சேரிக்கு செல்லும் வழியில் படிப்பதற்காக 10 அத்தியாங்கள் கொண்ட ஒரு மர்ம கதை புத்தகத்தை வர்ஷா வாங்குகிறாள். அந்த புத்தகத்தை ஒவ்வொரு அத்தியாயமாக படித்து வருகிறாள் வர்ஷா. அந்த கதைகளில் நடக்கும் சம்பவங்கள் நேரிலேயே நாயகனுக்கு நடக்கிறது. ஆனால், அது நாயகனுக்கும், வர்ஷாவுக்கும் தெரிவதில்லை.

9 அத்தியாயங்களை படித்துமுடித்த வர்ஷா, பத்தாவது அத்தியாயத்தை திறக்கும் நேரத்தில் பிரச்சினைகளால் துவண்டுபோன நாயகன், எரிச்சலில் அந்த புத்தகத்தை வாங்கி தூக்கிப் போட்டுவிடுகிறார்.பின்னர், இவர்கள் செல்லும் வழியில் தொலைந்து போன ஒரு குழந்தையை மீட்டு, அவளது பெற்றோரிடம் ஒப்படைக்க ஒரு வீட்டுக்கு செல்கிறார்கள். அந்த வீடு ஏகப்பட்ட மர்மங்களை உள்ளடக்கிய வீடு. அந்த வீட்டில் கணவன், மனைவியும் அந்த குழந்தையுடன் வாழ்ந்து வருகிறார்கள்.அதில் மனைவி மட்டும் ஏதோ பறிகொடுத்தவள்போல் அமர்ந்திருப்பதை பார்த்து அவளிடம் வர்ஷா போய் என்னவென்று கேட்க, அவள் அந்த மர்ம புத்தகத்தை பற்றிய விவரங்களை இவளிடம் கூறுகிறாள்.

இந்நிலையில், நாயகன் திடீரென்று காணாமல் போய்விடுகிறான். இதனால் பதற்றமடைந்த வர்ஷா, நாயகனை எப்படியாவது கண்டுபிடிக்க வேண்டும் என்று முடிவெடுத்து சமீராவை தேடிப் போகிறாள். சமீராவை அழைத்துக் கொண்டு அந்த மர்ம புத்தகத்தை தேடி எடுத்து, அதில் இருக்கும் மர்மங்களை கண்டுபிடிக்க முயல்கிறாள்.
முடிவில், அந்த மர்ம புத்தகத்தை கண்டுபிடித்து, அதில் மறைந்திருக்கும் மர்மங்களை கண்டுபிடித்தார்களா? காணாமல் போன நாயகனை கண்டுபிடித்தார்களா? அவனுடன் ஜோடி சேர்ந்தது யார்? என்பதை திகிலுடன் சொல்ல முயற்சித்திருக்கிறார்கள்.நாயகன் சரணுக்கு பிளேபாய் மாதிரியான கதாபாத்திரம். ஆனால், அந்த கதாபாத்திரத்திற்கு சற்றும் பொருந்தாமல் இருக்கிறார். இவரை தேடி, தேடி நாயகிகள் காதலிக்கிறார்கள் என்றால், அது படத்திற்கு மட்டுமே சாத்தியம். நாயகிகளாக வர்ஷா, சமீரா இருவரும் அழகில் கொஞ்சம் பரவாயில்லை.படத்தில் காட்சிகள் ஒவ்வொன்றும் பிய்த்து பிய்த்து எடுத்தாற்போல் காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர். படத்தை காதல், திகில், மர்மம் என ஒவ்வொரு கோணத்திலும் பயணித்து திரைக்கதையில் கோட்டைவிட்டிருக்கிறார் இயக்குனர். படத்தில் பாடல்கள் பரவாயில்லை. பின்னணி இசை இரைச்சல். ஒளிப்பதிவு கண்களுக்கு எரிச்சலைத்தான் கொடுத்திருக்கின்றன.

மொத்தத்தில் ‘அத்தியாயம்’ திகில்………

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago