நடிகை அமலாபால், விஜய் நிச்சயதார்த்தம்!…

சென்னை:-கிரீடம், பொய் சொல்லப்போறோம், தெய்வத்திருமகள், தலைவா உள்பட பல படங்களை டைரக்டு செய்தவர் விஜய். இவர் பட அதிபர் ஏ.எல்.அழகப்பனின் இளைய மகன் ஆவார்.விஜய் டைரக்டு செய்த ‘தெய்வத்திருமகள்,’ ‘தலைவா’ ஆகிய 2 படங்களிலும் அமலாபால் கதாநாயகியாக நடித்தார்.

அப்போது இரண்டு பேருக்கும் இடையே காதல் அரும்பியது. இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார்கள். இவர்களின் திருமணத்துக்கு இரண்டு பேரின் பெற்றோர்களும் சம்மதம் தெரிவித்தார்கள்.அதைத்தொடர்ந்து அமலாபால்-விஜய் நிச்சயதார்த்த நிகழ்ச்சி, அமலாபாலின் சொந்த ஊரான கேரள மாநிலம் கொச்சியில் நடந்தது. கொச்சி ஆலுவா என்ற இடத்தில் உள்ள புனித ஜூட் கிறிஸ்தவ ஆலயத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அப்போது, அமலாபால்-விஜய் இருவரும் மோதிரம் மாற்றிக்கொண்டார்கள்.

மணமக்களை உறவினர்களும், நண்பர்களும் வாழ்த்தினார்கள். நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் நடிகர் விக்ரம், நடிகை அனுஷ்கா, சரண்யா பொன்வண்ணன், இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ் குமார், அவருடைய மனைவியும், பாடகியுமான சைந்தவி ஆகியோர் கலந்துகொண்டு அமலாபால்-விஜய் ஜோடியை வாழ்த்தினார்கள்.அனைவரையும் பட அதிபர் ஏ.எல்.அழகப்பன், நடிகர் உதயா ஆகிய இருவரும் வரவேற்றார்கள். அதைத்தொடர்ந்து நெடுமஞ்சேரி என்ற இடத்தில் மலையாள முறைப்படி, ‘சங்கீத்’ என்ற நிகழ்ச்சி நடந்தது. அதில் ஏராளமான மலையாள திரையுலக கலைஞர்கள் கலந்துகொண்டார்கள்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago