சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கும் நயன்தாரா, எமி ஜாக்சன்!…

சென்னை:-சூர்யா தற்போது லிங்குசாமி இயக்கத்தில் ‘அஞ்சான்’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் சூர்யா ஜோடியாக நயன்தாரா, எமி ஜாக்சன் நடிக்கலாம் எனத் தெரிகிறது.

நயன்தாரா இதற்கு முன் சூர்யா ஜோடியாக ‘ஆதவன்’ படத்தில் நடித்துள்ளார். அநேகமாக, நயன்தாரா படத்திற்காக உறுதி செய்யப்பட்டு விட்டார் என்றே சொல்கிறார்கள். அதே சமயம் இரண்டாவது கதாபாத்திரத்திற்காக ஸ்ருதிஹாசனை கேட்டிருக்கிறார்கள். ஆனால், கால்ஷீட் பிரச்சனை காரணமாக அவரால் நடிக்க முடியாமல் போயிருக்கிறது. எனவே, தற்போது ‘ஐ’ படத்தில் விக்ரம் ஜோடியாக நடித்து வரும் ‘மதராசபட்டிணம்’ அறிமுக நாயகி எமி ஜாக்சனிடம் பேசி வருகிறார்களாம். விரைவில் இது பற்றிய அறிவிப்பு வரும் என்கிறார்கள்.

இந்த படம் பேய் கதை என்றும் சொல்லப்படுகிறது. சூர்யா படத்தல் பேயாகவும் நடிக்கிறாராம். அதே சமயம் பயமுறுத்தும்படியான பேயாக இல்லாமல் நகைச்சுவைக் கதாபாத்திரமாகவே அந்த பேய் இருக்கும் என்று சொல்கிறார்கள். சூர்யா, இதுவரை முழு நீள நகைச்சுவைக் கதாபாத்திரத்தில் எந்த படத்திலும் நடிக்கவில்லை. வழக்கமான ஆக்ஷன் படங்களிலிருந்து மாறுபட்டு நடிக்க வேண்டும் என்று நினைத்ததாலேயே வெங்கட் பிரபு இயக்கும் படத்தில் நடிக்க சம்மதித்தார் என்கிறார்கள்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago