இந்தியில் தொடர்ந்து நடித்ததால் ஒரு வருடத்துக்கு முன் மும்பை பந்த்ரா பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கினார். அது ஆடம்பர குடியிருப்பு என்பதால் மாதவாடகையாக கனிசமான தொகை கொடுக்க வேண்டியுள்ளது. இதனால் சேமிப்பு கரைந்தது.அந்த வீட்டில் சுருதிஹாசன் தாக்கப்பட்ட சம்பவமும் நடந்தது. அங்கு பாதுகாப்பு இல்லை என்றும் எனவே வீடு மாறும்படி நெருக்கமானவர்கள் வற்புறுத்தினர். இதையடுத்து மும்பையில் சொந்தமாக வீடு வாங்கி குடியேற தயாரானார்.
மும்பை அந்தேரி பகுதியில் இரண்டு படுக்கை அறையுடன் அவருக்கு பிடித்தமான வீடு அமைந்தது. அந்த வீட்டை விலை பேசி முடித்தார். என்ன விலை என்பது உறுதியாக தெரியாவிட்டாலும் பல கோடி மதிப்பு இருக்கும் என்று மும்பை பட உலகினர் முணுமுணுக்கின்றனர்.அது ஆடம்பரமான வீடு என்றும் வசதி படைத்தவர்கள் வசிக்கும் பகுதியில் இருக்கிறது என்றும் அவர்கள் சொல்கிறார்கள். இந்த வீட்டை வாங்குவதற்காக வங்கியில் பெரும் தொகை கடன் வாங்கி இருந்தார்.
அதற்காக செக்குகள் கொடுத்து இருந்தார்.அந்த செக்கை வங்கியில் செலுத்தியபோது பணம் இல்லை என்று திரும்பி வந்ததாம். இதனால் வங்கி நிர்வாகத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். பணத்தை வாங்க சுருதிஹாசனை அவர்கள் தொடர்பு கொண்டு பேசி வருவதாக கூறப்படுகிறது. இதை வைத்து தான் சுருதிக்கு பணக்கஷ்டம் ஏற்பட்டுள்ளது என்கின்றனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே