இந்நிலையில் கோச்சடையான் படம் வர்த்தக ரீதியில் தோல்வியைத் தழுவிவிட்டது என்று கூறி வருகிறார்கள் திரைப்பட வியாபாரிகள்.கோச்சடையான் படத்தின் வர்த்தக வெற்றி குறித்து வெளிப்படையாய் பேசி இருக்கிறார் தயாரிப்பாளர்.
குறுகிய கால அவகாசத்திலும், குறைந்த பட்ஜெட்டிலும் கோச்சடையான் படத்தைத் தயாரித்தோம். எனவே படத்தில் சின்னச்சின்ன குறைகள் இருப்பது உண்மைதான். இப்போது படத்தைப் பார்க்கும்போது, இன்னும் நன்றாக பண்ணி இருக்கலாம் என்று தோன்றுகிறது. கோச்சடையான் அடுத்த பாகத்தில் அதிக சிரத்தை எடுத்து பணியாற்றுவோம்.
மோஷன் கேப்சர் தொழில்நுட்பம் என்பது இந்திய ரசிகர்களுக்கு புதிது. தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்கள் படத்தை ஏற்றுக் கொண்டார்கள். ஆனால், ஹிந்தி ரசிகர்கள் இந்த தொழில்நுட்பத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. வட இந்தியாவில் கோச்சடையான் படத்திற்கு வரவேற்பு இல்லை என்பது உண்மைதான். தமிழ் மற்றும் தெலுங்கில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்திக்கு போட்ட முதலீட்டை எடுக்க எதிர்பார்த்த நாட்களை விட அதிக நாட்கள் தேவைப்படும் என்று நினைக்கிறேன். ஆனால், நாங்கள் முதலீடு செய்த பணத்தினை எடுத்து விடுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறோம்.என்று சொல்கிறார் முரளி மனோகர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே