சுதந்திர தினத்தன்று வெளியாகும் ‘அஞ்சான்’!…

சென்னை:-லிங்குசாமியின் இயக்கத்தில் சூர்யா, சமந்தா நடித்து வரும் படம் அஞ்சான். இதில் சூர்யா சாப்ட்வேர் என்ஜினீயராகவும், மும்பை தாதாவாகவும் நடிக்கிறார். மும்பையில் முதல் ஷெட்யூலும், புனேயில் இரண்டாவது ஷெட்யூலுமாக படப்பிடிப்புகள் முடிந்துள்ளது. அடுத்த ஷெட்யூல் கோவாவில் நடக்க இருக்கிறது. இதற்கிடையில் படம் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திரதினத்தன்று வெளிவருவது உறுதியாகி இருக்கிறது.

இதுகுறித்து லிங்குசாமி கூறியிருப்பதாவது: பெரும்பகுதி படப்பிடிப்பு முடிந்து விட்டது. சுதந்திரத்தன்று வெளியிடுவதற்கு ஏற்ற மாதிரி பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. இன்னும் ஒரு பாடல் காட்சியும் ஒரு சில வசன காட்களும் மட்டுமே படமாக்கப்பட வேண்டியது இருக்கிறது. வருகிற 8ம் தேதி முதல் கோவாவில் பாடல் படமாகிறது என்றார்.படத்திற்கான டிரைலரை புதுமுமையான முறையில் வெளியிட இருக்கிறார்கள். இந்த மாத இறுதிக்குள் டிரைலர் வெளியிடப்பட்டுவிடும்.

ஜூலையில் யுவன் சங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள் வெளியிடப்படும். கோவாவில் எடுக்கப்படும் பாடல் காட்சியில் சூர்யாவும், சமந்தாவும் ஆட இருக்கிறார்கள். அவர்களுடன் 200 நடன கலைஞர்களும் ஆடுகிறார்கள். இதற்காக பிரமாண்ட ஏற்பாடுகள் நடந்து வருகிறது. வருகிற 15ம் தேதிக்குள் படப்பிடிப்பு தொடர்பான அத்தனை பணிகளும் முடிந்து விடும்” என யூனிட் வட்டார தகவல்கள் தெரிவிக்கிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago