இப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. முதல் 3 நாட்களில் 42 கோடி வசூல் செய்ததாக படத்தினை வெளியிட்ட ஈராஸ் நிறுவனம் தெரிவித்தது. ‘கோச்சடையான்‘ படத்தின் இறுதிக் காட்சியில் அடுத்த பாகத்திற்கான அறிகுறிகள் தெரிந்தன. தற்போது படத்தின் தயாரிப்பாளர் முரளி மனோகர் அதனை உறுதிப்படுத்தி இருக்கிறார் கிடைத்த நேரத்திலும், பட்ஜெட்டிலும் ‘கோச்சடையான்’ படத்தினை பண்ணினோம். இன்னும் நன்றாக பண்ணி இருக்கலாம். ‘கோச்சடையான்’ அடுத்த பாகத்தில் அதிக சிரத்தை எடுத்து பணியாற்றுவோம்.மோஷன் கேப்சர் தொழில்நுட்பம் என்பது இந்திய ரசிகர்களுக்கு புதிது. தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்கள் படத்தினை ஏற்றுக் கொண்டார்கள்.
ஆனால், இந்தி ரசிகர்கள் இந்த தொழில்நுட்பத்தினை ஏற்றுக் கொள்ளவில்லை. வட இந்தியாவில் ‘கோச்சடையான்’ படத்திற்கு வரவேற்பு இல்லை என்பது உண்மை தான்.தமிழ் மற்றும் தெலுங்கில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்திக்கு போட்ட முதலீட்டை எடுக்க எதிர்பார்த்த நாட்களை விட அதிகம் தேவைப்படுகிறது. ஆனால், நாங்கள் முதலீடு செய்த பணத்தினை எடுத்து விடுவோம் என்ற நம்பிக்கையில் இருக்கிறோம் என்று முரளி மனோகர் தெரிவித்து இருக்கிறார்.தயாரிப்பாளரின் இந்த பேச்சால் ‘கோச்சடையான்’ படத்தின் வசூல் வெற்றியா, தோல்வியா என்ற பெரிய கேள்வி எழுந்துள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே