தோல்வி கண்ட பஞ்சாப் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான நடிகை பிரீத்தி ஜிந்தாவுடன் கைகுலுக்கி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார். அத்துடன் வெற்றி பெற்ற இரவு பெங்களூர் ஓட்டலில் அணியினருக்கு உற்சாக விருந்தை நடிகர் ஷாருக்கான் அளித்தார். விருந்து அதிகாலை வரை நீடித்தது.சாம்பியன் பட்டம் வென்ற கொல்கத்தா அணிக்கும், அதன் உரிமையாளரும், நடிகருமான ஷாருக்கானுக்கும், மேற்கு வங்காள முதல்மந்திரி மம்தா பானர்ஜி வாழ்த்து தெரிவித்துள்ளார். அத்துடன் இறுதிப்போட்டியில் சதம் அடித்த பெங்காலை சேர்ந்த விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹாவுக்கும் சமூக வலைதளத்தின் மூலம் மம்தா பானர்ஜி வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார்.கடந்த முறை போல் இந்த முறையும் கோப்பையை வென்ற கொல்கத்தா அணியினருக்கு பாராட்டு விழா நடத்த பெங்கால் கிரிக்கெட் சங்கமும், மேற்கு வங்காள அரசும் முடிவு செய்துள்ளது.
பாராட்டு விழா கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று மாலை நடக்கிறது.கடந்த முறை வீரர்களுக்கு தங்கப்பதக்கம் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டது குறித்து மேற்கு வங்காள அரசு மீது சர்ச்சை கிளப்பியது. இதனால் இந்த முறை எந்த மாதிரி விழா நடத்தப்படும் என்பது தெளிவாக தெரியவில்லை.வெற்றி குறித்து கொல்கத்தா அணி உரிமையாளர்களில் ஒருவரான நடிகர் ஷாருக்கான் அளித்த பேட்டியில், ‘மனிஷ் பாண்டே ஆட்டம் சிறப்பாக இருக்கும் என்று நம்பினேன். அதேபோல் அவர் அபாரமாக ஆடினார். சிறப்புக்குரிய இந்த வெற்றியை எனது குழந்தை அப்ராம்க்கும், அணி நிர்வாகத்தினருக்கும் அர்ப்பணிக்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே