தெலுங்கில் விரைவில் ஆரம்பமாகும் ‘கிக்’ 2!…

சென்னை:-தமிழில் வெளியான ‘தில்லாலங்கடி’ படத்தின் ஒரிஜனல் படம் தான் ‘கிக்’. தெலுங்கில் ரவி தேஜா, ஷாம், இலியானா மற்றும் பலர் நடித்திருந்தனர். 2009ம் ஆண்டு வெளிவந்த தெலுங்கு ‘கிக்’ படம் ரவி தேஜா நடித்து வெளிவந்த படங்களிலேயே மிகப் பெரிய வசூலைக் குவித்த படமாக அமைந்தது. 52 தியேட்டர்களில் 100 நாட்களைக் கடந்து ஓடிய இந்த படம் சுமார் 30 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்ததாகச் சொல்கிறார்கள்.

தற்போது, இந்த படம் சல்மான் கான், ஜாக்குலின் பெர்ணான்டஸ் நடிக்க ஹிந்தியிலும் ரீமேக்காகி வருகிறது. ஜுலை மாதம் வெளியாகும் எனத் தெரிகிறது.
இதனிடையே ‘கிக்’ படத்தின் இரண்டாம் பாகத்தை தெலுங்கில் தயாரிப்பது பற்றி பல செய்திகள் உலவி வந்தன. கடைசியாக அப்படம் பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரவி தேஜாவே இந்த இரண்டாம் பாகத்திலும் ஹீரோவாக நடிக்கப் போகிறார். சுரேந்தர் ரெட்டி இயக்க உள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் ஆரம்பமாக உள்ளது.

‘கிக் 2’ படத்தின் ஹீரோயினாக யார் நடிப்பார்கள், படத்திற்கு இசையமைக்கப் போவது யார் என்பது பற்றிய விவரங்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளன. இந்த படத்தின் கதை முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இல்லாமல் புது கதையாக இருக்கும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago