ரூ.100 கோடி வசூல் செய்து ‘கோச்சடையான்’ சாதனை!…

சென்னை:-கோச்சடையான் படம் கடந்த வெள்ளியன்று உலகம் முழுவதும் ரிலீசானது.தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட ஆறு மொழிகளில் வந்தது. 3 ஆயிரம் தியேட்டர்களில் திரையிடப்பட்டது. வெளிநாடுகளில் ஒருநாள் முன்னதாகவே சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்டன. சிறப்பு காட்சிகளால் மட்டுமே ரூ.5 கோடி வரை வசூல் ஈட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது. படம் ரிலீசானதும் அனைத்து தியேட்டர்களிலும் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடின.

மூன்று நாட்களில் ரூ.42 கோடி வசூல் ஈட்டியது. இதுகுறித்து சோச்சடையான் படத்தை தயாரித்த ஈராஸ் இண்டர்நேஷனல் ஊடக நிறுவனத்தின் முதுநிலை துணைத் தலைவர் நந்து அகஜா வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
ரஜினிகாந்த் நடித்த கோச்சடையான் படம் கடந்த 23ம் தேதி உலகம் முழுவதும் 3 ஆயிரம் திரையரங்குகளில் திரையிடப்பட்டது. இரட்டை பரிமாணம் மற்றும் முப்பரிமாண தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட இப்படம் 6 மொழிகளில் வெளியானது.ரஜினி ரசிகர்கள் மத்தியில் இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. உலகம் முழுவதும் வசூல் குவித்து வருகிறது. கடந்த 3 நாட்களில் இந்தியாவில் ரூ. 30 கோடியும் வெளிநாடுகளில் ரூ. 12 கோடியும் வசூல் ஈட்டியுள்ளது. வார இறுதியில் கோச்சைடையான் பட முன்பதிவுக்கு கடும் போட்டி இருந்தது.

தமிழ்நாட்டில் ரஜினிக்கு உள்ள செல்வாக்கை நிரூபிக்கும் வகையில் படம் பார்ப்பதற்கு முதல் நாள் இரவே தியேட்டருக்கு வந்து ரசிகர்கள் காத்து இருந்தனர். இதனால் காலை 5 மணிக்கே படம் திரையிடப்பட்டது. இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. சென்னையில் மட்டும் மூன்று நாட்களில் ரூ.4.16 கோடி வசூல் குவித்து சாதனை படைத்துள்ளது. கோச்சடையான் வெளியாகி இன்றுடன் 5 நாட்கள் நிறைவடைந்துள்ளது.எனவே வசூல் ரூ.50 கோடியை தாண்டியிருக்கும் என்று கூறப்படுகிறது. தியேட்டர்கள் வசூலை தவிர்த்து 6 மொழிகளில் இப்படத்தின் டி.வி. சேட்டிலைட் உரிமைகள் விற்கப்பட்டு உள்ளது. மொபைல் போன்களுடனும் ஒப்பந்தங்கள் போடப்பட்டு உள்ளது. ‘ரிங்டோன்’ வசூலும் வருகிறது. இப்படி அனைத்து வகையிலும் வந்த மொத்த உருவாய் ரூ.100 கோடி இருக்கும் என்று திரையுலக வட்டாரத்தில் பேசப்படுகிறது. இது தமிழ் திரையுலகின் புதிய சாதனையாக கருதப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

2 years ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

2 years ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

2 years ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

2 years ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago