இதன் அடுத்த கட்ட படப்பிடிப்புகள் சென்னை பின்னி மில்லில் நடக்கிறது. இதற்காக அங்கு சுமார் 2 கோடி செலவில் சிறைச்சாலை செட் போடப்பட்டுள்ளது. சுமார் 300 தொழிலாளர்கள் ஆர்ட் டைரக்டர் செல்வகுமார் தலைமையில் கடந்த ஒரு மாதமாக இந்த செட்டை அமைத்து வருகிறார்கள்.இதுபற்றி இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் கூறியதாவது:-புறம்போக்கு படக் கதையின் முக்கிய பகுதிகள் சிறைச்சாலையில் நடக்கிறது. இதில் ஆர்யா, விஜய்சேதுபதி, சாம் நடிக்கும் காட்சிகள் படம்பிடிக்கப்படுகிறது. இதற்காக பல்வேறு சிறைச்சாலைகளை போய் பார்த்தோம். மிகுந்த பாதுகாப்புள்ள சிறைச்சாலைகளில் படம்பிடிக்க அனுமதி இல்லை என்று கூறிவிட்டார்கள். அனுமதி கிடைக்கும் சின்ன சிறைச்சாலைகள் நான் எதிர்பார்த்ததுபோல இல்லை.
அதனால் சிறைச்சாலையை செட் போடுகிறோம். பல சிறை அதிகாரிகளை சந்தித்து, பல சிறைகளை பார்த்து மிக நேர்த்தியாக இந்த சிறை வடிவமைக்கப்பட்டுள்ளது. வழக்கமாக சினிமாவில் காட்டப்படும் சிறைக்கும், சிறை காட்சிகளுக்கும் நிஜமான சிறைச்சாலைக்கு சம்பந்தம் இருக்காது. இதில் சிறையை அப்படியே யதார்த்தமாக பதிவு செய்கிறோம். இந்த செட்டில் 65 நாட்கள் தொடர்ச்சியாக படப்பிடிப்பு நடக்கிறது என்றார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே