தயாரிப்பாளரை தவிக்க வைக்கும் ‘அட்டகத்தி’ தினேஷ்!…

சென்னை:-‘அட்டகத்தி’ என்ற படத்தில் அறிமுகமாகி அந்த படம் ஓரளவிற்கு பெயர் வாங்கித் தந்ததுமே தலைகால் புரியாமல் ஆட ஆரம்பித்தவர் அந்த படத்தின் நாயகனாக நடித்த தினேஷ் என்கிறார்கள். அந்த படத்திற்கடுத்து அவர் நாயகனாக ஒப்பந்தம் செய்யப்பட்ட படம் ‘வாராயோ வெண்ணிலாவே’. விக்ரமன் இயக்கி வந்ததும் தெரியாமல் போனதும் தெரியாமல் போன படமான ‘நினைத்தது யாரோ’ படத்தைத் தயாரித்த நிறுவனமே இப்படத்தையும் தயாரிக்கிறது.

விக்ரமன் படத்திலேயே பல கோடி ரூபாய் நஷ்டத்தை அடைந்த நிறுவனம், இந்த படத்திலாவது நாலு காசு சம்பாதிக்கலாம் என்று பார்த்தால் அதற்கு தினேஷ் தடையாக இருந்திருக்கிறாராம்.எப்போதோ வெளிவர வேண்டிய படம்தான் ‘வாராயோ வெண்ணிலாவே’. ஆனால், இடையில் ‘குக்கூ’ படத்தில் நடிக்க ஆரம்பித்து இந்த படத்தின் படப்பிடிப்புக்கு தினேஷ் வராமலே போய்விட்டாராம். குக்கூ படம் எப்படியும் வெற்றியைக் குவித்து விடும் கோடிகளில் சம்பளத்தை உயர்த்தி விடலாம் என்று நினைத்தவருக்கு அந்த படம் குப்புற விழுந்துவிடவே இப்போது தவிக்கிறாராம்.

சினிமாவைப் பொறுத்தவரை எந்த படம் ஓடும், எந்த படம் ஓடாது என்று யாராலும் கணிக்க முடியாது என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம்தான். வளர்ந்து வரும் நேரத்தில் அட்டகத்தி தினேஷின் இந்த ஆட்டம், அவருக்கே ஆபத்தாக முடியும் என்கிறார்கள் இப்படித்தான் இதற்கு முன் சில ஹீரோக்கள் ஓடும் என்று நினைத்த படங்கள் ஓடாமல் போனதும், ஓடாது என்று நினைத்த சில படங்கள் வெற்றிகரமாக ஓடியதையும் அவர்கள் நினைவு கூறுகிறார்கள்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago