சரத்குமாருக்கு ஜோடியாகும் இளம் ஹீரோயின்கள்!…

சென்னை:-நீண்ட இடைவெளிக்கு பிறகு சரத்குமார் ஹீரோவாக நடிக்கும் படம் ‘சண்டமாருதம்’. அவரது மனைவி ராதிகா சரத்குமார் தயாரிக்கிறார். இந்தப் படத்தில் சரத்குமார் சர்வேஸ்வரன், ரவி என்ற இரண்டு கேரக்டரில் நடிக்கிறார். இந்த இரண்டு கேரக்டருக்கும் ஜோடியாக இரண்டு இளம் ஹீரோயின்கள் நடிக்கிறார்கள். அவர்கள் அவ்னி மோடி மற்றும் சரயு.

இவர்களில் அவ்னி மோடி குஜராத், காந்தி நகரைச் சேர்ந்தவர்.பி.ஏ பைனான்ஸ் படித்து முடித்திருக்கிறார். மாடலிங், விளம்பர படங்களில் நடித்திருக்கிறார். குஜராத்தில் அனைவருக்கும் தெரிந்த தியேட்டர் ஆர்ட்டிஸ்ட். நான் ராஜாவாக போகிறேன் இவருக்கு முதல் படம். அதில் நகுலனின் இமாச்சல பிரதேச தோழியாக நடித்திருப்பார். தற்போது சண்டமாருதத்தில் வில்லன் சரத்குமாரின் ஜோடி. இதுதவிர இரண்டு தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.

சரயு சண்டமாருதத்தில் ஹீரோ சரத்குமாரின் ஜோடி. கேரளத்து வரவு. ஹஸ்பெண்ட் இன் கோவா, நித்ரா, ஜனப்ரியா, உள்பட 7 மலையாள படங்களில் ஹீரோயினாக நடித்து விட்டு சண்டமாருதம் மூலமாக தமிழுக்கு வருகிறார். சரத்குமாருக்கு அத்தை பெண்ணாக கிராமத்து கேரக்டரில் நடிக்கிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago