இந்த சம்பவத்தில் இருந்து அணுமின் நிலையம் உள்ள இடத்தை தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கிறார்கள். ஆனால் பிரையன் 15 வருட காலமாக அந்தப் பகுதிக்குள் செல்ல முயற்சி செய்து வருகிறார். ஒரு நாள் இவரை போலீஸ் கைது செய்து விடுகிறது. இதை அறிந்த இவரது மகன் ஆரோன் அவரை பார்ப்பதற்காக ஜப்பான் செல்கிறார். அங்கு போலீசிடமிருந்து தந்தையை மீட்கிறார்.பிரையன் தனது மகனிடம் உனது தாய் பூகம்பத்தால் இறக்கவில்லை. தடை செய்யப்பட்ட பகுதிக்குள் வேறு ஏதோ உலகத்தை அச்சுறுத்தகூடிய ஒன்று உள்ளது. இதை இவர்கள் மறைக்கிறார்கள் என்று கூறுகிறார். இதை கேட்ட ஆரோன் தன் தந்தையுடன் தடை செய்யப்பட்ட பகுதிக்கு மீண்டும் செல்கிறார். அங்கு அணுக்கரு பொருட்களை 15 வருட காலமாக சாப்பிட்டு ஒரு மிருகம் வளர்ந்து கொண்டிருக்கிறது என்று அவர்கள் அறிகிறார்கள்.
அதைப் பார்த்த பிரையன் இதைத்தான் நான் 15 வருடங்களுக்கு முன்பு சொன்னேன் அப்போது யாரும் நம்பவில்லை என்கிறார். இதைக் கேட்ட ஆராய்ச்சியாளரான கென் மேலும் இதைப் பற்றி அவரிடம் உள்ள குறிப்புகளை எடுத்துக் கொண்டு ஆராய்கிறார்.
அப்போது இவர் சொல்வது அனைத்தும் உண்மை என்று தெரியவருகிறது. அந்த மிருகத்தை அழிக்க முயற்சி செய்கிறார்கள். ஆனால் அந்த மிருகம் தப்பித்து சென்று விடுகிறது. பின்னர் அந்த மிருகம் வேறொரு மிருகத்துடன் தொடர்பு கொள்ள முயற்சி செய்வது தெரியவருகிறது. அது காட்ஸில்லாவாக இருக்குமோ என்று எண்ணுகிறார்கள். ஆனால் அதைப்போலவே வேறொரு மிருகம் இருப்பது தெரியவருகிறது. இந்த மிருகங்கள் அணுக்கருக்களை உணவாக உட்கொள்கின்றன. இதனால் நாட்டில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருள் சூழ்கிறது. இதை ராணுவம் தடுக்க முயற்சி செய்கிறது. ஆனால் அவர்களின் முயற்சி பயனளிக்காமல் போகிறது.
இந்த மிருகங்கள் செய்யும் செய்கைகளை தடுக்க இதைப் போன்ற மிருகம் ஒன்று வந்தால்தான் அழிக்க முடியும் என்று ராணுவம் எண்ணுகிறது. இந்நிலையில் ஆழ்கடலில் இருக்கும் காட்ஸில்லா இந்த மிருகங்களின் செய்கைகளை அறிகிறது. இவைகளை அழிக்க ஆழ்கடலில் இருந்து காட்ஸில்லா வந்து இந்த மிருகங்களுடன் சண்டை போடுகிறது.இறுதியில் காட்ஸில்லா இந்த மிருங்களுடன் சண்டைப் போட்டு நாட்டு மக்களை காப்பாற்றியதா? இல்லையா? என்பதே மீதிக்கதை.படத்தில் நாயகன் ஆரோன், நாயகி எலிசபெத் ஓல்சன், நாயகனின் தந்தை பிரையன், தாய் ஜூலியட், ஆராய்ச்சியாளர் கென் ஆகியோர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.இவர்கள் என்னதான் கதையுடன் ஒன்றி நடித்திருந்தாலும் படத்தில் மிகப்பெரிய ஹீரோவாக காட்ஸில்லாதான் ஜொலிக்கிறது. சிறப்பான அனிமேசன் செய்து அசத்தியிருக்கிறார்கள். நாயகன் ஆரோன் முட்டைகளை அழிக்க போராடும் காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கிறார்.
அலெக்சாண்டரின் பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது. குறிப்பாக பிரம்மாண்ட காட்சிகளுக்கு ஏற்ப சிறப்பாக இசையமைத்திருக்கிறார். சீமசின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறது.
இதுவரை காட்ஸில்லாவை மிகப்பெரிய அழிவு சக்தியாக காண்பித்தவர்கள் இப்படத்தில் ஆக்க சக்தியாக காண்பித்துள்ளார் இயக்குனர் கரேத். அதற்கு பெரிய கைதட்டல் கொடுக்கலாம். மூன்று மிருகங்கள் சண்டை போடும் காட்சிகளை எடுத்த இயக்குனரைப் பாராட்டலாம். மற்ற காட்சிகளில் கூடுதல் விறுவிறுப்பை கூட்டியிருக்கலாம். அதிக பிரம்மாண்ட காட்சிகள் படத்தில் குறைவாக உள்ளது.
மொத்தத்தில் ‘காட்ஸில்லா’ நண்பன்…….
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே