ரஜினியுடன் நடிப்பது பெருமை என கூறிய நடிகை சோனாக்சி சின்ஹா!…

விளம்பரங்கள்

சென்னை:-இந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கிறார் நடிகை சோனாக்சி சின்ஹா. நடிகர் சத்ருகன் சின்ஹாவின் மகள். ‘லிங்கா’ படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். ரஜினி, சோனாக்சி சின்ஹா நடிக்கும் காட்சிகளை மைசூர் அருகே படத்தின் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் படமாக்கி வருகிறார்.ரஜினியுடன் நடிப்பது குறித்து சோனாக்சி சின்ஹா அளித்த பேட்டி வருமாறு:–

இந்தியில் சல்மான்கான் படம் மூலம் அறிமுகமானேன். தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினி படம் வாயிலாக அறிமுகமாகி இருக்கிறேன். இதை விட சிறந்த அறிமுகம் வேறு எதுவும் இல்லை. லிங்கா படத்தையும் இந்தி ‘டபாங்’ படம் போலவே கருதுகிறேன். ‘லிங்கா’ இரண்டு தலைமுறைகள் பற்றிய கதை. நான் 1940 தலைமுறை கேரக்டரில் நடிக்கிறேன். ரஜினிக்கு உதவும் பெண்ணாக வருகிறேன். படத்தின் கதை வித்தியாசமாக உள்ளது. இதில் நடிப்பதில் ஆர்வமாக இருக்கிறேன்.ரஜினியும், என் தந்தை சத்ருகன் சின்ஹாவும் நெருங்கிய நண்பர்கள். சிறு வயதிலேயே அவரை சந்தித்து இருக்கிறேன். ‘லிங்கா’ படப்பிடிப்பில் அவருடன் இணைந்து நடித்த போது எனக்கு பதற்றமாக இருந்தது. இதை அவரிடம் சொன்ன போது எனக்குதான் உன்னோடு நடிக்கும் போது பதற்றமாக இருக்கிறது என்றார்.

எளிமையாக இருந்தார். சகஜமாக பழகினார். காதல் காட்சிகளில் எனது எல்லை தெரியும். அதை மீற மாட்டேன் என்று என்னிடம் ஆறுதல் வார்த்தைகள் கூறினார்.
ரஜினி படம் மூலம் தமிழில் நான் அறிமுகமாவது அறிந்து என் தந்தை சத்ருகன் சின்ஹா சந்தோஷப்பட்டார். ரஜினி மகள் ஐஸ்வர்யா எனக்கு வாழ்த்து சொன்னார். சவுந்தர்யா கோச்சடையான் பட விழாவுக்காக மும்பை வந்த போது பார்த்தேன். ரஜினி குடும்பத்தினர் எல்லோரும் என் மேல் அன்பாக இருக்கிறார்கள். பிரபுதேவா, ஏ.ஆர்.முருகதாஸ் போன்ற தமிழ் இயக்குனர்களுடன் இந்தி படங்களில் பணியாற்றியுள்ளதால் தமிழ் மொழி எனக்கு பிரச்சினையாக இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: