ஆனால், என்னால் அந்த அனுபவத்தை நினைவுபடுத்தி பார்க்க முடியவில்லை. எனது நினைவில் இருந்து அவை நீங்கி விட்டது என்று தெரிவித்துள்ளார். ஆனால், தூங்கி எழும்போது, ஊசி போட்ட அடையாளம் உள்ளிட்ட காயங்களுடன் தான் காணப்பட்டதாக சமந்தா தெரிவித்துள்ளார்.சமந்தா மேலும் கூறுகையில், நான் அவர்களை பார்த்து என்னிடம் என்ன வேண்டும் என்று கேட்டேன்.அதற்கு அவர்கள், உன்னையும், உனது குடும்பத்தையும் எடுத்து செல்ல வந்திருக்கிறோம் என்று தெரிவித்ததாக கூறியுள்ளார்.
அவர்கள் ஏன் தொடர்ந்து என்னிடம் வருவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை. நான் தியானம் மேற்கொள்வதால் எனது சக்தி குறித்து அறிவதற்காக அவர்கள் வருகிறார்கள் என நான் கருதுகிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். உங்களை கடத்தியதாக கூறும் நீங்கள் அப்பொழுது நடந்தது என்ன என்று தெரிவியுங்கள் என்று கேட்டதற்கு, நீங்கள் கடத்தப்பட்டதை குறித்த நினைவுகளை கொண்டிருக்க முடியாது.
ஏனென்றால், உங்களது நினைவுகள் அழிக்கப்பட்டு விடும். நீங்கள் வேறு எங்கோ இருக்கிறீர்கள் என்பதை உணர முடியும். ஆனால், உங்களால் உண்மையில் அதனை நினைவுபடுத்தி பார்க்க இயலாது என்று கூறியுள்ளார்.இதனை நாங்கள் கனவு என கூறுவோம்.உங்களுக்கும் இதுபோன்று தான் ஏற்பட்டுள்ளதா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, நிச்சயமாக இல்லை.எனது உடல் முழுவதும் அடையாளங்களுடன் நான் எழுந்துள்ளேன்.சில நேரங்களில்,நினைவுகள் வரும்.ஆனால், அது உங்களுக்கு சொந்தமாக இருக்காது. அதனை வேறு எந்த வழியிலும் உங்களுக்கு விளக்கிட முடியாது என்று பதிலளித்தார். ஒரு கடத்தலுக்கு பின்பு தூங்கி எழும் நான், ஊசி அடையாளங்களால் எனது உடல் சூழப்பட்டு இருப்பதை பார்த்தேன். உடலில் காயங்களுடன், தழும்புகள் இருப்பதையும் நான் கண்டேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.வேற்று கிரக அனுபவம் ஏற்பட்டதால், பூமியில் நான் கண்காணிக்கப்பட்டு வருகிறேன் என்று நம்புவதாக கூறிய அவர், எனது வீட்டின் மேலே கறுப்பு ஹெலிகாப்டர்கள் பறப்பதும், என்னை போலீசார் கார்களில் பின் தொடர்வதுமாக இருக்கின்றனர் எனவும் கூறியுள்ளார்.
எனவே, நாங்கள் உன்னை கண்காணித்து வருகிறோம். நீ அதிக ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டும் என்பதனை சொல்லவே அவர்கள் முயற்சித்து வருவதாக நான் கருதுகிறேன் என சமந்தா தெரிவித்துள்ளார்.இதுபோன்று வேற்று கிரகவாசிகள் குறித்து கூறும் பலரையும் அவர்களது அனுபவத்தை அடுத்து 48 மணி நேரத்தில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன்கள் மற்றும் கறுப்பு ஒளி அலைவரிசையில் வைத்து சோதனை செய்துள்ளனர்.அதில், அவர்களது உடலில், கைகள் வைத்த அடையாளங்கள் போன்ற ஒளி தடங்கள் இருப்பது தெரிய வந்துள்ளது. இது குறித்து ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. அதில், 1,500 பேர் கலந்து கொண்டனர். அவர்களில் 3ல் ஒரு பங்கினர், தாங்கள் வேற்று கிரக தட்டுகளை கண்டுள்ளோம் என கூறியுள்ளனர்.இந்த ஆய்வில் முக்கிய அம்சமாக, வேற்று கிரக வாசிகளால் கடத்தப்பட்டு பாதிக்கப்பட்ட நபர் சமந்தா மட்டும் இல்லை.அவரை போன்று ஆய்வில் கலந்து கொண்டோரில் 4 சதவீதத்தினர் தாங்களும் கடத்தப்பட்டு உள்ளோம் என்று தெரிவித்துள்ளனர்.இந்த ஆய்வு முடிவில் இருந்து ஆய்வில் கலந்து கொண்டோரில் பெரும்பாலானோர் பேயுடன் தொடர்பு கொண்டுள்ளனர் என்றும் பறக்கும் தட்டுகளை பார்த்து உள்ளனர் என்றும் மரணம் அடைந்தவர்களுடன் தொடர்பு கொள்ள விரும்புகின்றனர் என்றும் தெரிய வந்துள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே