மறுபக்கம் நாயகி ரம்யா நம்பீசனையும் காதலித்து வருகிறார். ரம்யா நம்பீசன் தன் தந்தையிடம் காதலை சொல்லி திருமணத்திற்கு சம்மதம் வாங்குகிறார்.
இந்நிலையில் வைபவ் பார்த்து வந்த வேலையை இழக்க நேரிடுகிறது. இதனால் மனமுடைந்து போகிறார் வைபவ். இதற்கிடையில் போலி மருந்துகளை விற்றுவரும் சாயாஜி ஷிண்டேவை போலீசார் தேடி வருகிறார்கள். இதிலிருந்து தப்பிக்க நண்பனான கோட்டா சீனிவாசராவிடம் தன் பணத்தை ஆட்கள் மூலம் கொடுத்தனுப்ப சொல்கிறார்.
பணத்தை எடுத்து செல்லும் கோட்டா சீனிவாசராவின் ஆட்கள் தவறுதலாக வைபவ் தங்கியிருக்கும் வீட்டின் முன் வைத்துவிட்டு செல்கிறார்கள். வெளியில் வந்து பார்க்கும் வைபவ் அந்தப் பணத்தை எடுத்து வைத்துக் கொள்கிறார். பணம் சரியான இடத்திற்கு போய் சேராததால், கோட்டா சீனிவாசராவும், சாயாஜி ஷிண்டேவும் பணத்தை தேடுகிறார்கள்.இந்நிலையில் இந்த பணத்தை வைத்திருக்கும் வைபவ், பணத்தை என்ன செய்தார்? பணத்தை தேடி வரும் கோட்டா சீனிவாசராவ் மற்றும் சாயாஜி ஷிண்டேவிடம் வைபவ் மாட்டிக் கொண்டாரா? என்பதே மீதிக்கதை.
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் வைபவ், மிகவும் கனமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார். காட்சிகளுக்கு தேவையான நடிப்பை வெளிப்படுத்தாமல் நடித்திருப்பது வருத்தத்திற்குரியது. நாயகி ரம்யா நம்பீசனுக்கு காட்சிகள் குறைவு. கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்.வில்லன்களாக வரும் கோட்டா சீனிவாசராவ், சாயாஜி ஷிண்டே ஆகியோரில் வில்லத்தனம் காமெடியாக தான் இருக்கிறது. தமன் இசையில் பாடல்கள் அருமை. பின்னணி இசையும் சிறப்பாக செய்திருக்கிறார்.எட்வின் சகாய் ஒளிப்பதிவு காட்சிகளை அழகுபடுத்தியிருக்கிறது.
மொத்தத்தில் ‘டமால் டுமீல்’ காமெடி சத்தம்…..
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே