இந்த வார பாக்ஸ் ஆபீசில் மிக பெரிய மாற்றம் இல்லை என்றாலும் கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது இந்த வாரம் பாக்ஸ் ஆபீசில் சில மாற்றம் ஏற்பட்டுள்ளன.கடந்த வாரம் வெளியான சில திரைப்படம் நல்ல வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் இடம் பெற்றுள்ளன. சென்னையில் வசூலின் அடிப்படையில் இந்த வாரமும் முதல் இடத்தை மான் கராத்தே திரைப்படம் தக்கவைத்துள்ளது.இந்த வார பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் பின்வருமாறு…
7.நிமிர்ந்து நில்:-
கடந்த வார பாக்ஸ் ஆபீசில் 5ம் இடத்தில் இருந்த நிமிர்ந்து நில் திரைப்படம் சென்னையில் மொத்தம் 20 ஷோவ்கள் ஓடி ரூ. 88,704 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 7ம் இடத்திற்கு பின்தங்கியது.
6.குக்கூ:-
கடந்த வார பாக்ஸ் ஆபீசில் ஆபீசில் 3ம் இடத்தில் இருந்த குக்கூ திரைப்படம் சென்னையில் மொத்தம் 76 ஷோவ்கள் ஓடி ரூ.5,12,645 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 6ம் இடத்திற்கு பின்தங்கியது.
5.தெகிடி:-
கடந்த வார பாக்ஸ் ஆபீசில் 6ம் இடத்தில் இருந்த தெகிடி திரைப்படம் சென்னையில் மொத்தம் 12 ஷோவ்கள் ஓடி ரூ. 60,120 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 5ம் இடத்தை பெற்றுள்ளது.
4.நெடுஞ்சாலை:-
கடந்த வார பாக்ஸ் ஆபீசில் 4ம் இடத்தில் இருந்த நெடுஞ்சாலை திரைப்படம் சென்னையில் மொத்தம் 36 ஷோவ்கள் ஓடி ரூ.1,70,772 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 4ம் இடத்தை தக்கவைத்துள்ளது.
3.ஒரு கண்ணியும் மூணு களவானிகளும்:-
கடந்த வார பாக்ஸ் ஆபீசில் 2ம் இடத்தில் இருந்த ஒரு கண்ணியும் மூணு களவானிகளும் திரைப்படம் சென்னையில் மொத்தம் 124 ஷோவ்கள் ஓடி ரூ. 10,88,352 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 3ம் இடத்திற்கு பின்தங்கியது.
2.நான் சிகப்பு மனிதன்:-
கடந்த வாரம் பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான நான் சிகப்பு மனிதன் திரைப்படம் சென்னையில் மொத்தம் 189 ஷோவ்கள் ஓடி ரூ.56,78,592 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 2ம் இடத்தை பெற்றுள்ளது.
1.மான் கராத்தே:-
கடந்த வார பாக்ஸ் ஆபீசில் முதல் இடத்தில் இருந்த மான் கராத்தே திரைப்படம் சென்னையில் மொத்தம் 360 ஷோவ்கள் ஓடி ரூ.1,02,58,776 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் முதல் இடத்தை தக்கவைத்துள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி