ரஜினிக்கு ஜோடியாக சோனாக்க்ஷி நடிக்க எதிர்ப்பு தெரிவிக்கும் அவரின் தந்தை!…

சென்னை:-சௌந்தர்யா இயக்கத்தில் உருவான ‘கோச்சடையான்’ படத்தில் நடித்தார் ரஜினி. அவருக்கு ஜோடியாக தீபிகா படுகோன் நடிக்கிறார். இதன் கதை, வசனம் எழுதிய கே.எஸ்.ரவிகுமார் இயக்குனர் மேற்பார்வை பொறுப்பையும் ஏற்றிருந்தார். இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

இதையடுத்து ரஜினியை வைத்து புதிய படம் இயக்குகிறார் ரவிகுமார். இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக அனுஷ்கா நடிக்க அவரிடம் பேசப்பட்டது. இரட்டை வேடத்தில் ரஜினி நடிப்பதாக கூறப்படுகிறது. மற்றொரு ரஜினி கதாபாத்திரத்துக்கு ஜோடியாக நடிக்க பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹாவிடம் கால்ஷீட் கேட்கப்பட்டது.அவர் சம்மதம் தெரிவிக்காமல் காலம் கடத்தி வந்தார். இவர் பாலிவுட் நடிகர் சத்ருகன் சின்ஹாவின் மகள்.சத்ருகனும், ரஜினியும் சம காலத்து நடிகர்கள். தந்தை வயதுள்ள ரஜினியுடன் மகள் நடிப்பதை சத்ருகன் விரும்பவில்லை என்பதால்தான் சோனாக்ஷி சம்மதம் தெரிவிக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் ரஜினியுடன் ஏற்கனவே எந்திரன் படத்தில் ஐஸ்வர்யாராய், கோச்சடையான் படத்தில் தீபிகா படுகோன் போன்ற டாப் ஹீரோயின்கள் நடித்திருப்பதுடன் பல பாலிவுட் ஹீரோயின்கள் ரஜினியுடன் நடிக்க விருப்பம் தெரிவித்திருந்தனர்.

ஹீரோயின்களின் இந்த ஆர்வம் சோனாக்ஷியின் மனதிலும் எழுந்தது. தனது விருப்பத்தை தந்தை சத்ருகனிடம் தெரிவித்தார். அவர் சம்மதிக்கவில்லை. தொடர்ந்து பிடிவாதம் பிடித்து, வலியுறுத்தியதால் வேறு வழியின்றி அவரும் அதற்கு பச்சை கொடி காட்டினார். இதையடுத்து ரஜினியுடன் நடிக்க சோனாக்ஷி சம்மதம் தெரிவித்தார்.இது பற்றி சோனாக்ஷி கூறும்போது, ஒரு வழியாக தென்னிந்திய படத்தில் நடிக்க முடிவு செய்துவிட்டேன். இதைவிட சிறந்த ஒரு படம் எனக்கு கிடைக்காது. கதை கேட்டேன் பிடித்திருந்தது. ஒரேயொரு சூப்பர் ஸ்டார் ரஜினி சார். அவருடன் ஜோடியாக நடிக்கிறேன். இந்த படத்திலிருந்து எனது தென்னிந்திய திரையுலக பயணத்தை தொடங்குகிறேன் என்றார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago