சென்னை:-பாலா இயக்கத்தில் அதர்வா, வேதிகா, தன்ஷிகா மற்றும் பலர் நடித்து வெளியான படம் ‘பரதேசி‘. இப்படத்தை பி ஸ்டுடியோஸ் மூலம் பாலவே தயாரித்தார். படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்தார். செழியன் ஒளிப்பதிவு செய்தார்.
இப்படம் ஏற்கனவே சிறந்த ஆடைவடிவமைப்பிற்காக தேசிய விருது பெற்றது. தற்போது நார்வே தமிழ் திரைப்பட விழாவில் நான்கு விருதுகளைப் வென்றிருக்கிறது.
சிறந்த திரைப்படம் (பரதேசி), சிறந்த இயக்குநர் (பாலா), சிறந்த நடிகர் (அதர்வா), சிறந்த ஒளிப்பதிவு (செழியன்)ஆகிய நான்கு பிரிவுகளில் விருதுகளை வென்றிருக்கிறது ‘பரதேசி’ திரைப்படம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி