மகன் நடிக்கும் படத்தில் நடிக்கும் விஜயகாந்த்!…

சென்னை:-தேமுதிக கட்சியை தொடங்கிய விஜயகாந்த் அதன்பிறகு நடிப்பதை குறைத்துக் கொண்டார். கடைசியாக கடந்த 2010ம் ஆண்டு ‘விருதகிரி“ என்ற படத்தை அவரே இயக்கி நடித்தார். தொடர்ந்து அரசியலில் தீவிரமாக கவனம் செலுத்தி வருவதால் நடிப்பதை நிறுத்தி வைத்திருந்தார்.

இதற்கிடையில் தனது இளைய மகன் சண்முக பாண்டியனை சினிமாவில் நடிகராக அறிமுகப்படுத்துவதாக கடந்த ஆண்டு அறிவித்தார். இப்படத்தை சந்தோஷ் என்பவர் இயக்குகிறார். படத்துக்கு சகாப்தம் என பெயரிட்டுள்ளனர். தொடக்கத்தில் இப்படத்தில் தான் நடிப்பதுபற்றி முடிவு செய்யாமல் இருந்தார் விஜயகாந்த். தற்போது மகன் படத்துக்கு பலம் சேர்க்கும் வகையில் முக்கிய வேடமொன்றில் நடிக்க முடிவு செய்திருக்கிறார்.

இதை சமீபத்தில் அவர் மேற்கொண்ட நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது தெரிவித்தார்.காதலை மையமாக வைத்து உருவாகவிருந்த இப்படத்தில் தற்போது விஜயகாந்த் நடிக்க உள்ளதால் அரசியல் அதிரடி வசனங்களும் இடம்பெறும் என்று கூறப்படுகிறது. இதில் 2 கதாநாயகிகள் நடிக்க உள்ளனர். இம்மாதம் 24ம் தேதி தேர்தல் நடக்கிறது. அதன்பிறகு இப்படத்தின் ஷூட்டிங் தொடங்க திட்டமிடப்பட்டிருக்கிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago