முன்னதாக இந்த ரசிகர் மன்றத்தின் தலைவராக இளையராஜாவின் மகனும், பிரபல இசையமைப்பாளருமான கார்த்திக் ராஜா செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், கார்த்திக் ராஜாவுக்கு நிறைய பணிகள் இருப்பதால் அவரால் அந்த பொறுப்பு வகிக்க முடியாத சூழல் உள்ளது. இளையராஜா, எவ்வளவோ சொல்லியும் கார்த்திக் ராஜா தலைவர் பொறுப்பு வகிக்க மறுத்துவிட்டார். கார்த்திக் பதிலாக யுவனிடமும் பேசி பார்த்துள்ளனர்.
ஆனால் அவரும் படங்களின் இசையில் பிஸியாக இருப்பதால் மறுத்துவிட்டார். அதனால் இவர்களுக்கு பதில் அவர்களது சகோதரியான பவதாரணி தலைவராக பொறுப்பேற்கிறார். மதுரையில் நடக்கும் இசை நிகழ்ச்சியின் போது இதற்கான அறிவிப்புகள் வெளியாக இருக்கின்றன.
இதுகுறித்து பவதாரணி கூறுகையில், அப்பாவின் ரசிகர் மன்றம் மூலம் நிறைய நற்பணிகளை செய்ய உள்ளோம். முதற்கட்டமாக பண்ணபுரத்தில் பள்ளிக்கூடம் ஒன்றை கட்ட இருக்கிறோம். தொடர்ந்து எங்களது ஜீவா அறக்கட்டளை சார்பிலும், அப்பாவின் ரசிகர் மன்றம் மூலம் நிறைய நல்ல காரியங்களை செய்ய இருக்கிறோம். தற்போது வரை சுமார் 1 கோடிக்கும் அதிகமான பேர் அப்பாவின் ரசிகர் மன்றத்தில் இணைந்துள்ளனர் என்று கூறியுள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே