இனம் (2014) திரை விமர்சனம்…

ஈழத்தில் இருந்து தமிழகத்திற்கு அகதியாக வந்த ஒரு பெண்ணின் வாழ்க்கையில் ஏற்பட்ட ரணங்களை சொல்லும் கதையே ‘இனம்’.ஈழத்தில் போர் நடந்துக் கொண்டிருக்கிறது. அப்போது அங்கு ஆதரவு இல்லாமல் தவிப்போர்க்கு அடைக்கலம் கொடுத்து உணவு வழங்கி வருகிறார் சரிதா. இவருடைய அரவணைப்பில் சுகந்தா மற்றும் பல சிறுவர்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியராக கருணாஸ்.

இவர்கள் வசிக்கும் பகுதியை சுற்றி இலங்கை ராணுவம் குண்டு மழை பொழிகிறது. இதற்கிடையில் இவர்கள் குடும்பத்தில் புதிதாக சேருகிறார் கரண். இவர் சிறிது மனநிலை சரியில்லாதவர். இவரை சுகந்தா மற்றும் நண்பர்கள் மிகவும் அன்புடன் பார்த்துக் கொள்கிறார்கள்.
ஒருநாள் இவர்கள் வசிக்கும் வீட்டில் இலங்கை ராணுவம் குண்டு போடுகிறது. இதில் சில சிறுவர்கள் உயிரிழக்கிறார்கள். உயிர் பிழைத்த இளைஞர்கள் இலங்கைக்கு எதிரான போரில் கலந்துக்கொள்ள சென்று விடுகிறார்கள். இனி யாரும் இது போல் போருக்கு சென்றுவிடக்கூடாது என்பதற்காக சரிதா, மீதமுள்ளவர்களுக்கு திருமணம் செய்து வைக்க முடிவெடுக்கிறார். அதன்படி, கரணுக்கும் சுகந்தாவுக்கும் திருமணம் செய்து வைக்கிறார்.பின்னர் ஒருநாள் போரில் குண்டடிபட்டு சரிதா இறந்து விடுகிறார். இதனால் கரணும் சுமந்தாவும் என்ன செய்வதென்று தெரியாமல் இருவரும் கருணாஸ் உதவியோடு இலங்கையில் இருந்து தப்பிக்க முயற்சி செய்கிறார்கள். இறுதியில் இலங்கையில் இருந்து தப்பித்தார்களா? அல்லது இலங்கையின் குண்டு மழைக்கு இரையானர்களா? என்பதே மீதிக்கதை.

ஈழப் போரில் பாதிக்கப்பட்டவர்கள் ஒவ்வொருவரும் அவர்கள் சந்தித்த துன்பங்களை கதையாக சொல்ல முயன்றால் இனம் போன்று பல்லாயிரக்கணக்கான படங்களை எடுக்க வேண்டி வரும். தான் சந்தித்த ஒரு பெண்ணின் வாழ்க்கை சம்பவங்களை படமாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் சந்தோஷ் சிவன். கதைக்கு தேவையான கதாபாத்திரங்களை தேர்வு செய்து அவர்களுக்கு மேக்-அப்பே இல்லாமல், ஈழ மக்களின் நிலையை அழகாக பதிவு செய்திருக்கிறார்.கதாபாத்திரங்களான சரிதா, கரண், சுகந்தா, கருணாஸ் மற்றும் தேர்வு செய்யப்பட்ட அனைவரும் இயல்பான நடிப்பை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்கள். இப்படத்தை பொழுதுபோக்கு சித்திரமாக பார்க்க இயலாது. ஒரு இனம் அழிந்து போனதும் அதில் ஏற்பட்ட ஆறாத ரணங்களுமே இப்படத்தின் பதிவு. குறிப்பாக கரணின் கதாபாத்திரத்தை சிறப்பாக பதிவு செய்திருக்கிறார். இவரின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம். விஷாலின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு மேலும் பலம்.சந்தோஷ் சிவனின் ‘இனம்’ சொல்லாமல் போனது பல. இனத்தில் நாம் சொல்லாதது சில. அதை திரையில் பார்க்கவும்.

மொத்தத்தில் ‘இனம்’ தமிழ் இன அழிவின் வலி…..

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago