பாலா படத்தில் இருந்து ஸ்ரேயா நீக்கம்!… வரலட்சுமிக்கு வாய்ப்பு…

சென்னை:-தமிழ் சினிமாவில் நடிகை ஸ்ரேயாவின் மார்க்கெட் தற்போது சரிந்துள்ளது.ரஜினியுடன் ‘சிவாஜி’ படத்தில் நடித்த பிறகு நயன்தாரா, திரிஷாபோல் மார்க்கெட்டை நிலையாக தக்க வைத்துக்கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தொடர்ந்து சில படங்கள் தோல்வியானதால் ஓரம் கட்டப்பட்டார்.

தமிழில் கடைசியாக ‘ரெளத்திரம்’ படத்தில் நாயகியாக நடித்தார். இப்படம் 2011–ல் வந்தது. அதன்பிறகு கன்னடத்தில் அவர் நடித்த ‘சந்திரா’ படத்தை தமிழில் டப்பிங் செய்து வெளியிட்டனர். நீண்ட நாட்கள் தமிழ் பட வாய்ப்புகள் வராததால் தவிப்பில் இருந்தார்.இந்நிலையில் சசிகுமாரை கதாநாயகனாக வைத்து பாலா இயக்கும் ‘தாரை தப்பட்டை’ படத்தில் நடிக்க ஸ்ரேயாவை தேர்வு செய்தனர். இதனால் மகிழ்ச்சியானார். இந்த படம் மூலம் மீண்டும் தமிழ் பட உலகில் இன்னொரு ரவுண்ட் வர திட்டமிட்டார்.

படப்பிடிப்புக்காக சென்னை வந்தும் தங்கினார். ஆனால் கடைசி நேரத்தில் இந்த படவாய்ப்பும் பறிபோனது. அவருக்கு பதில் வரலட்சுமி நடிக்கிறார். சிலர் ஸ்ரேயா வேண்டாம் என்று பாலாவை நிர்பந்தம் செய்ததாகவும் எனவேதான் அவர் கழற்றி விடப்பட்டதாகவும் செய்தி பரவி உள்ளது. இதனால் ஸ்ரேயா மனஉளைச்சலில் இருக்கிறார். தனக்கு எதிராக சதி நடப்பதாக அவர் குமுறுகிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago