ஆர்யா, அமலாபால் பற்றி கிசு கிசு பரப்பிய நடிகர்!…

சென்னை:-ஆர்யா, சிம்பு, விஷால் போன்றவர்கள் சக ஹீரோயின்களுடன் இணைத்து பேசப்படுகின்றனர். இவர்களில் முதலிடத்தில இருப்பவர் ஆர்யா. நயன்தாரா, அனுஷ்கா, எமி ஜாக்ஸன், டாப்ஸி என தன்னுடன் நடித்த பெரும்பாலான ஹீரோயின்களுடன் இவர் ரொமான்ஸ் செய்கிறார் என்ற கிசுகிசு வெளியான வண்ணம் உள்ளது. அடுத்து அமலா பாலுடன் இணைத்து இவர் தற்போது கிசுகிசுவில் சிக்கி உள்ளார்.

ஏற்கனவே இந்த ஜோடி வேட்டை என்ற படத்தில் இணைந்து நடித்தது. அப்போது நடந்த பட விளம்பர நேரடி நிகழ்ச்சிகளில் பங்கேற்ற இருவரும் ஒருவரையொருவர் கலாய்த்த வண்ணம் இருந்தனர். தற்போது இணையதளத்தில், 2வது முறையாக அமலா பாலை மணக்கும் ஆர்யா என்ற தலைப்பில் அமலாபால் கழுத்தில் ஆர்யா தாலி கட்டுவதுபோல் படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இந்த கிசுகிசுவுக்கு சொந்தக்காரர் பார்த்திபன் தானாம். கதை திரைக்கதை வசனம் இயக்கம் என்ற படத்தை பார்த்திபன் இயக்கி வருகிறார்.

இதில் கவுரவ வேடத்தில் பிரகாஷ்ராஜ், அமலாபால், ஆர்யா, விஜய் சேதுபதி, நஸ்ரியா போன்றவர்கள் நடிக்கின்றனர். சமீபத்தில் இப்படத்துக்கு அமலா பால் கழுத்தில் ஆர்யா தாலி கட்டும் காட்சியை படமாக்கினார்.அந்த படம்தான் ஆர்யா-அமலா பால் திடீர் டும் டும் கிசுகிசுவுக்கு காரணம் என்று தெரியவந்திருக்கிறது. இதுபற்றி ஆர்யா கூறும்போது, இதுவொரு ஜாலியான ஷூட்டிங். அமலா பாலுக்கு தாலிகட்டி திருமணம் செய்வதுபோல் 2வது முறையாக நடிக்கிறேன் என்றார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago