ஊரில் திருவிழா ஒன்று நடக்கிறது. அதில் சிலம்பாட்டத்தில் பண்ணையாரின் ஆளை, வேலன் அடித்து போட்டியில் ஜெயித்து விடுகிறார். இதனால் பண்ணையாரின் கோபத்துக்கு அவர் ஆளாகிறார். அதன் பிறகு இரவு நடக்கும் பண்ணையாரின் மகன் நடத்தும் நடன நிகழ்ச்சியில், ஆபாசமாக ஆடியதாக போலீசில் புகார் கூறி பண்ணையாரின் மகனை கைது செய்து விடுகிறார்கள். இவரை கைது செய்ததால் நடனக் கலைஞர்கள் பாதிக்கப்படுகிறார்கள். இதன் விளைவாக ஒரு கலைஞர் இறக்க நேரிடுகிறது. இவரை காப்பாற்றுகிறார் வேலன்.நடனக் கலைஞர்கள் பாதிக்கப்படக் கூடாது என்ற நோக்கத்தில், அக்கலைஞர்களை வரவழைத்து அவர்களுக்காக ஒரு நடனக்குழு ஒன்றை வேலன் ஆரம்பிக்கிறார். இந்த விசயம் பண்ணையாருக்கும் ஜெயில் இருந்து வெளி வரும் அவருடைய மகனுக்கும் தெரிய வருகிறது. இதனால் வேலனை தீர்த்துக் கட்ட முடிவு செய்கிறார்கள்.இறுதியில் வேலனை பண்ணையார், பழி வாங்கினாரா? இல்லையா? என்பதே மீதிக்கதை.
வேலனாக நடித்திருக்கும் நாமக்கல் எம்.ஜி.ஆர்., எம்.ஜி.ஆர் போல் தோற்றம் உள்ளதால் நடிப்பு, நடை, நடனம், சண்டை என அனைத்திலும் அவரைப் போலவே செய்கிறார். ஆனால் ரசிக்கத்தான் முடியவில்லை. எம்.ஜி.ஆர். என்று நினைத்துக் கொண்டு இவர் செய்யும் வேலைகள் கொஞ்சம் அதிகமாக தான் தெரிகிறது.படத்தில் நாயகிக்கு நடிக்க வாய்ப்புகள் குறைவு. பாடலுக்கு மட்டுமே வந்து செல்கிறார். அதிலும் கொடுத்த வாய்ப்பை பயன்படுத்த வில்லை. ஒளிப்பதிவு படத்திற்கு மேலும் பலவீனம். தத்துவப் பாடல்கள் என நிறைய பாடல்கள் வந்தாலும் ஓரிரு பாடல்களை ரசிக்கலாம்.
மொத்தத்தில் ‘இதயத்தில் ஒருவன்’ பழையவன்…..
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே