விஜய்க்கு மிகவும் பிடித்த சைவம்!…

சென்னை:-கிரீடம், மதராச பட்டினம், தாண்டவம், தெய்வ திருமகள், தலைவா போன்ற படங்களை இயக்கியவர் ஏ.எல்.விஜய். இவர் தற்போது சைவம் என்ற படத்தை இயக்குகிறார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். நீரவ்ஷா ஒளிப்பதிவை கவனிக்கிறார்.இப்படம் குறித்து விஜய் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது:-

சைவம் படம் இனம், மதம் பற்றிய படம் இல்லை. இப்படத்தில் கதாநாயகன், நாயகி என்று யாரும் கிடையாது. சண்டைக்காட்சிகள் ஏதுவும் இல்லை. அதனால் இப்படம் வித்தியாசமான படமாக இருக்கும். தலைவா படத்திற்கு முன் இப்படத்தை இயக்க வேண்டியது. விஜய் படம் கிடைத்ததால் படத்தை தள்ளி வைத்திருந்தேன். இதுவரை பெரிய நடிகர்களை வைத்து இயக்கிய நான் தற்போது புதுமுகங்களை வைத்து இயக்கி வருகிறேன். சென்னையில் உள்ளவர்கள் கிராமத்தில் உள்ள பல விசயங்களை மறந்து விட்டார்கள், அதை ஞாபகப்படுத்தும் படமாக இது இருக்கும். என் மனதிற்கு மிகவும் பிடித்தப்படம்.

நாசர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நாசரின் மகனும் நடிக்கிறார். மேலும் தெய்வ திருமகள் படத்தில் நிலா கதாபாத்திரத்தில் நடித்த சிறுமி சாரா, இப்படத்தில் தமிழ்செல்வி என்னும் கதாபாத்திரத்தில் வருகிறார். நிலாவை விட தமிழ்செல்வி அதிகமாக பேசப்படுவாள். படத்திற்கு ஜி.வி.பிரகாஷின் இசை மிகப்பெரிய பலமாக இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago