சசி குமார்,வரலட்சுமியை பாடாய் படுத்தும் இயக்குனர்!…

சென்னை:-பரதேசி படத்தையடுத்து பாலா இயக்கும் புதிய படத்தில் சசிகுமார் ஹீரோவாக நடிக்கிறார். கரகாட்ட கலைஞர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகும் இப்படத்திற்கு தாரை தப்பட்டை என பெயரிடப்படுகிறது. போடா போடி படத்தில் நடித்த வரலட்சுமி சரத்குமார் கதாநாயகியாக நடிக்கிறார். வெஸ்டர்ன் நடனத்தில் தேர்ச்சி பெற்ற வரலட்சுமிக்கு கரகாட்டம் ஆடிய அனுபவம் கிடையாது.

பாலா படத்துக்காக அதை முறைப்படி கற்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. தஞ்சையை சேர்ந்த கரகாட்ட கலைஞர்கள் குழு அவருக்கு பயிற்சி அளிக்கிறது. காலையில் தொடங்கி மாலை வரை வரலட்சுமிக்கு பயிற்சி தருவதால் அவருக்கு கடும் சோர்வு ஏற்பட்டுள்ளதாம். மேலும் வேடத்துக்கு ஏற்ப உடல் எடையை குறைப்பதற்காக உணவு கட்டுப்பாடும் மேற்கொண்டிருக்கிறார். தாடிதான் தனது அடையாளம் என்றிருந்த சுப்ரமணியபுரம் சசிகுமார் இப்படத்துக்காக தாடியை இழக்கிறார்.

கற்றை மீசையையும் மெலிதாக மாற்றிக்கொள்கிறார். நாதஸ்வர கலைஞராக சசி வேடம் ஏற்பதால் அதற்கான பயிற்சியை மேற்கொண்டிருக்கிறார். இளையராஜா இசை அமைக்கும் இப்படத்திற்கு ஏற்கனவே சில பாடல்கள் பதிவு செய்யப்பட்டுவிட்டன. படப்பிடிப்பு தொடங்குவதற்கான வேலை மும்முரமாக நடக்கிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago