இந்த உண்மையை டேனியல் பாலாஜியிடம் சொல்லிவிட்டு காதலனோடு வீட்டை விட்டு ஓட முடிவெடுக்கிறார். இதை தடுக்கவேண்டும் என முடிவெடுத்த டேனியல் பாலாஜி, தன்னுடைய சிந்தனையால் ப்ரீத்தியின் செல்போனில் உள்ள நம்பர்களை மாற்றி சேவ் செய்து விடுகிறார். இதை அறியாமல் காதலன் அனூப்பிற்காக காத்திருக்கும் ப்ரீத்தி, அனூப் வராததால் என்ன செய்வது என்று தெரியாமல் டேனியல் பாலாஜி வீட்டிற்கு செல்கிறார். அங்கு டேனியல் பாலாஜியின் சுயரூபத்தை தெரிந்து கொள்கிறார்.இறுதியில் டேனியல் பாலாஜியிடம் இருந்து தப்பித்தாரா? காதலன் அனூப்பிடம் சேர்ந்தாரா? என்பதே மீதிக்கதை.
டேனியல் பாலாஜி முற்பகுதியில் ஒருமுகமும், பிற்பகுதியில் மறுமுகத்தையும் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். குறிப்பாக இவர் சைக்கோவாக மாறும் காட்சிகளில் நடிப்பு திறமையை பாராட்டலாம். நாயகி ப்ரீத்தி தாஸ் அழகு பொம்மையாக வந்து செல்கிறார். நடிக்க வாய்ப்பு குறைவு என்றாலும் கொடுத்த கதாபாத்திரத்தை நன்றாக செய்திருக்கிறார். மற்றோரு நாயகனாக வரும் அனூப்பிற்கு காட்சிகள் குறைவே.
திரைக்கதையில் பெரும்பாலும் முந்தைய படங்களான சிவப்பு ரோஜாக்கள், காதல் கொண்டேன் சாயல் தெரிகிறது. லாஜிக் இல்லாமல் நிறைய காட்சிகளை இயக்குனர் கமல் சுப்ரமணியம் தவிர்த்திருக்கலாம். இருந்தாலும் படத்தை திரில்லிங்காக கொண்டு செல்ல முயற்சி செய்திருக்கிறார்.படத்தின் கூடுதல் பலம் ஒளிப்பதிவு. கொடைக்கானலில் எடுக்கப்பட்ட காட்சிகள் அருமை. படத்தின் பாடல்கள் குறைவு என்றாலும் பின்னணி இசை நன்றாக உள்ளது.
மொத்தத்தில் ‘மறுமுகம்’ www.imdb.eniyatamil.com பரவாயில்லை……
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே