இருவரும் மீண்டும் இணையும் படத்தினை தயாரிக்க திட்டமிட்டார் தயாநிதி அழகிரி. ஆனால், அப்படத்தின் பணிகள் நீண்ட காலம் நடைபெற்று வந்தது. மறுபுறம் வெற்றிமாறன் தொடர்ச்சியாக படத்தயாரிப்பு பணிகளிலும் ஈடுபட்டு வந்தார்.இந்நிலையில் மார்ச் 7ம் தேதி தனுஷ், தனது ட்விட்டர் தளத்தில், “6 தேசிய விருதுகள் வென்ற குழுவோடு மீண்டும் படம் பண்ணுகிறேன். வெற்றிமாறன் இயக்கத்தில் நான் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் துவங்கியது. எனது வுண்டர்பார் நிறுவனமே தயாரிக்கிறது என்று கூறிக்கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று கூறியுள்ளார்.
இப்படம் குறித்து விசாரித்ததில், வெற்றிமாறன் கூறிய கதை தனுஷிற்கு மிகவும் பிடித்து விட்டதாம். இப்படத்தினை நேரடியாக இந்தியில் பண்ணலாம். நான் உங்களை இந்தியில் இயக்குநராக அறிமுகம் செய்கிறேன் என்று கூறியிருக்கிறார் தனுஷ்.
இந்தி படமாக இயக்கி, அதனை ‘ராஞ்சனா’ படத்தினைப் போலவே தமிழில் டப்பிங் செய்ய திட்டமிட்டார் தனுஷ். ஆனால், இறுதியில் வேண்டாம்.. தமிழிலேயே பண்ணலாம் என்று கூறிவிட்டார் தனுஷ். இந்திக்காக தயார் செய்த கதையில், தமிழுக்காக சிறு மாற்றங்கள் செய்து தற்போது படப்பிடிப்பு நடத்தி வருகிறார்கள்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே