ஒருநாள் அந்த பெண் இவரிடம் உடனடியாக தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு நிர்பந்திக்க நாயகனோ தனது வீட்டில் உள்ளவர்களிடம் சென்று சம்மதம் வாங்கி வருகிறேன் என்று சொல்லி செல்கிறார். தனது காதலை அவர்களிடம் சொல்ல, அவர்களோ இப்போதைக்கு திருமணம் வேண்டாம் என்று சொல்லிவிடுகின்றனர்.
இருந்தாலும், தனது காதலியை எப்படியாவது கரம்பிடிக்க நினைக்கும் நாயகன், அவளை யாருக்கும் தெரியாமல் பதிவு திருமணம் செய்துகொள்ளலாம் என முடிவெடுக்கிறார். தனது நண்பர்கள் மூலம் அவளை பதிவு திருமணம் செய்துகொள்ள ஏற்பாடு செய்கிறார்.
பதிவு திருமணத்தன்று காதலி வராததால் என்னமோ, ஏதோவென்று பதறிக்கொண்டு அவளுடைய வீட்டுக்கு செல்கின்றனர். அங்கு, அவர்கள் வீட்டாரோடு வாக்குவாதத்தில் ஈடுபடும் நாயகனை, அவள் திருமணம் செய்ய மறுக்கிறார்.
இதில் நடக்கும் மோதலில் அந்த பெண்ணின் அண்ணன் தாக்கப்பட, நாயகன் சிறை செல்ல வேண்டியதாகிறது. சிறையில் இருந்து அவரது அண்ணன் இவரை வெளிக்கொண்டு வருகிறார்.தன்னை காதலித்தவள் இப்படி செய்துவிட்டாளே என்று மனவேதனையில் இருக்கும் நாயகனுக்கு பெங்களூருவில் ஒரு இன்ஸ்ட்டியூட் ஒன்றில் வேலை கிடைக்கிறது. மன நிம்மதிக்கு அவ்வேலைக்கு செல்கிறான்.அங்கு படிக்க வரும் நாயகி மேகாவை பார்த்ததும் காதல் கொள்கிறார். நாளடைவில் இருவரும் காதலிக்க ஆரம்பிக்கின்றனர். படிப்பு முடிந்து சொந்த ஊரான டெல்லிக்கு செல்லும் நாயகி, நாயகனை டெல்லிக்கு வரவழைத்து தனது குடும்பத்தாரிடம் அவனை அறிமுகப்படுத்துகிறாள். நாயகனை அவளது குடும்பத்தாருக்கு ரொம்பவும் பிடித்துப் போகிறது. இருவருக்கும் திருமணம் செய்ய சம்மதமும் தெரிவிக்கிறார்கள். மேலும், நாயகனுடைய வீட்டில் இதற்கு சம்மதம் கேட்டு வருமாறும் கேட்டுக் கொள்கிறார்கள்.தனது ஊருக்கு திரும்பும் நாயகன் முதலில் தனது திருமணத்துக்கு நோ சொன்ன நாயகனுடைய குடும்பத்தார் இந்த திருமணத்துக்கு ஓ.கே. சொன்னார்களா? இல்லையா? என்பதே மீதிக்கதை.
நாயகன் விவேக் படம் முழுவதும் துறுதுறுவென வருகிறார். குறும்புத்தனமான நடிப்பில் அழுத்தம் பதிக்கிறார். நாயகிக்கு நடிப்பதற்கு வாய்ப்பு குறைவே என்றாலும் நிறைவாக நடித்திருக்கிறார்.பிரமீட் நடராஜன், மீரா கிருஷ்ணன், பாலாஜி மோகன் ஆகியோரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். சுவாமிநாதன் காமெடியில் கொஞ்சம் சிரிக்க வைத்திருக்கிறார்.காதலில் ஏற்படும் மோதலை அழுத்தமாக சொல்லியிருக்கும் இயக்குனர், உண்மையான காதலை அழுத்தமாக சொல்ல தவறியிருக்கிறார். முதல் பாதியில் விறுவிறுப்பாக செல்லும் திரைக்கதை பிற்பாதியில் தடுமாறுகிறது.கே.ஆர்.கவின் இசையில் பாடல்கள் சுமார் ரகம்தான். யுகா ஒளிப்பதிவில் பாடல்கள் பதிவு செய்தவிதம் அருமை.
மொத்தத்தில் ‘ஒரு மோதல் ஒரு காதல்’ வழக்கமான பழைய காதல்….
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே