படப்பிடிப்புக்காக வைத்திருந்த குலாப் ஜாமுன்களை ஒரு கட்டு கட்டிய நடிகை!…

சென்னை:-கண்ணா லட்டு தின்ன ஆசையா ஹீரோயின் விசாகா சிங். வாலிப ராஜா என்ற படத்தில் நடித்து வருகிறார். சந்தோஷமான காட்சி ஒன்றில் எதிரில் வைக்கப்பட்டிருந்த குலாப் ஜாமுனை விசாகா சாப்பிடுவது போல் காட்சி படமாக்க இருந்தனர். காட்சி தொடங்கும் முன் ஒரு குலாப் ஜாமுனை சாப்பிட்ட விசாகா, அதன் சுவையில் தன்னை மறந்து கிண்ணத்தில் இருந்த 10க்கும் அதிகமான குலாப் ஜாமுன்களை வெளுத்து கட்டினார்.

இதை பார்த்து படக்குழு அதிர்ச்சி அடைந்தது. காட்சிக்கான டிஸ்கஷனில் இருந்த டைரக்டரோ தகவல் அறிந்து ஷாக் ஆனார். உடனே கடையிலிருந்து மீண்டும் குலாப் ஜாமுனை வாங்கிவந்து அதை காட்சிக்கான டேக் போகும்வரை மறைத்து வைக்க உதவியாளர்களுக்கு உத்தரவிட்டார்.இந்த ருசிகர சம்பவம் பற்றி விசாகா கூறும்போது, குடும்ப உறுப்பினர்கள் சந்தோஷமாக கூடி பேசிக்கொண்டிருந்த காட்சி படமாக்கப்பட்டது. ஒரு கிண்ணம் நிறைய குலாப் ஜாமுன் வைக்கப்பட்டிருந்தது. அதை சாப்பிட்டபடியே சிரித்து பேச வேண்டும் என்று இயக்குனர் கூறி இருந்தார். எனக்கு இனிப்பு என்றால் ரொம்ப பிடிக்கும். ஒரு ஜாமுனை எடுத்து வாயில்போட்டேன் அப்படியே கரைந்துவிட்டது. அந்த சுவை என்னை சுண்டி இழுக்கவே 10க்கும் மேற்பட்ட ஜாமுனை எடுத்து சாப்பிட்டேன்.

அருகில் இருந்த சக நடிகர்களும் ம்… வெளுத்துக்கட்டு என்று ஊக்கப்படுத்தினார்கள். காட்சியை படமாக்குவதற்குள் எல்லாவற்றையும் எடுத்து சாப்பிட்டுவிட்டேன். இதைப்பார்த்த பட யூனிட்டார், அடுத்த டேக் எடுத்தால் ஜாமுன் தேவைப்படும் என்பதால் என் கண்ணில் படாமல் மறைத்துவைத்து விட்டனர். ஜாமுன் சுவை இன்னும் என் நாவில் ஒட்டிக்கொண்டிருக்கிறது என்றார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago