ரசிகர்களிடம் சிக்கிய நடிகை!…

சென்னை:-‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’ படம் ரெயிலில் நடக்கும் கதையாகும். கண்ணன் இயக்குகிறார். மயிலாடுதுறை ரெயில் நிலையத்தில் விசேஷ அனுமதி பெற்று ஓடும் ரெயிலை போல என்ற பாடல் காட்சியை அவர் பட மாக்கினார்.

விமல், சூரி, பிரியா ஆனந்த் மூவரும் நடித்தனர். படப்பிடிப்பை காண ஏராளமான ரசிகர்கள் திரண்டனர். காலை 7 மணியில் இருந்து மாலை வரை ஆயிரக் கணக்கானோர் கூடி நின்றார்கள். ரெயில் நிலையம் ரசிகர்கள் கூட்டத்தில் நிரம்பி வழிந்தது. பக்கத்து ஊர்களில் இருந்தும் ரசிகர்கள் வந்து இருந்தார்கள். சுமார் ஒரு லட்சம் பேர் கூடினார்கள். அவர்கள் விமல், பிரியா ஆனந்தை பார்த்து கூச்சல் போட்டபடி இருந்தனர்.

சூரி படங்களில் பேசிய காமெடி வசனத்தை சொல்லியும் கலாய்த்தார்கள். டைரக்டர் கண்ணன் ரசிகர்களை அமைதியாக இருக்கும்படி கேட்டுக் கொண்டார். ஆனாலும் கூச்சல் நீடித்தது. இதனால் படப்பிடிப்பை தொடர முடியாமல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. விமல், பிரியா ஆனந்த் கேரவனுக்குள் அனுப்பப்பட்டனர். அப்போது ரசிகர்கள் பிரியா ஆனந்தை மறித்தனர். ஆட்டோ கிராப் கேட்டனர். சிலர் சேர்ந்து நின்று போட்டோ எடுத்துக் கொள்ள முயற்சித்தனர். இன்னும் சிலர் அத்து மீறி கையை பிடித்து இழுத்து ரகளை செய்தார்கள்.பிரியா ஆனந்த் கூட்டத்தில் சிக்கி தவித்தார். பாதுகாவலர்கள் சிரமப்பட்டு ரசிகர்கள் பிடியில் இருந்து பிரியா ஆனந்தை மீட்டு வேனுக்குள் அனுப்பி வைத்தனர். இது எனக்கு பயங்கரமான அனுபவம் என்றார் பிரியா ஆனந்த்.

டைரக்டர் கண்ணன் கூறும் போது, படப்பிடிப்பை பார்க்க சிதம்பரம், கடலூர், பகுதிகளில் இருந்தெல்லாம் ரசிகர்கள் லாரிகளில் வந்து கூடினார்கள். சுமார் ஒன்றரை லட்சம் பேர் திரண்டனர். போலீசாராலும் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. ஏற்கனவே ரெயில் நிலையத்தை பணம் கட்டி வாடகைக்கு எடுத்து விட்டோம். படப்பிடிப்பை நிறுத்தினால் தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்படும். எனவே கஷ்டத்தை பொறுத்துக் கொண்டு படப்பிடிப்பை நடத்தினேன் என்றார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

2 years ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

2 years ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

2 years ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

2 years ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

3 years ago