ஜெயம் ரவி, அமலாபால், சரத்குமார் ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள இப்படம் நேற்று (மார்ச் 7ம் தேதி) ரிலீஸ் ஆவதாக இருந்தது. ஆனால் படத்தின் தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட நிதி சிக்கலால் இப்படம் இன்று வெளியாகவில்லை. இந்நிலையில், நிமிர்ந்து நில் படம் வெளியாகததால் மனமுடைந்து இயக்குநர் சமுத்திரகனி தற்கொலை செய்து கொண்டதாக கோலிவுட் முழுக்க செய்தி காட்டுத்தீயாய் பரவியது.இதுப்பற்றி சமுத்திரகனி கூறியிருப்பதாவது:-நான் தற்கொலை முயற்சி செய்ததாக வந்த செய்தி முற்றிலும் தவறானவை. நான் நலமாகத்தான் இருக்கிறேன். கிட்டத்தட்ட 100க்கும் மேற்பட்ட நபர்கள் எனக்கு போன் செய்துள்ளனர்.அவர்கள் எல்லோரிடத்திலும் நான் நலமாகத்தான் இருக்கிறேன் என்று சொல்லி வருகிறேன்.
நிமிர்ந்து நில் படத்தை நான் நல்லபடியாக எடுத்து முடித்துவிட்டேன். தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட சில நிதி சிக்கலால் படம் ரிலீஸாகவில்லை.இதற்காக எல்லாம் நான் ஏன் தற்கொலை செய்து கொள்ள போகிறேன். படத்தின் தலைப்பையே நிமிர்ந்து நில் என்று வைத்துள்ளேன். அப்படியொரு தலைப்பை வைத்துவிட்டு கோழைத்தனமாக நான் அந்த வேலையை செய்ய மாட்டேன்.நான் தற்போது எனது அடுத்த படத்திற்கான கதை விவாதத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளேன் என்று கூறினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே