தமிழிலும் தெலுங்கிலும் தயாராகியிருக்கும் நிமிர்ந்து நில் படத்தில் தெலுங்கு பதிப்பில் நானி கதாநாயகனாக நடித்திருக்கிறார். இசையமைத்தருக்கிறார் ஜிவி பிரகாஷ். கானா பாலா பாடிய டோன்ட் ஒரி பி கேப்பி, ராஜாதி ராஜா, காதல் நேர்கையில் ஆகிய பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவுக்கு ரீச் ஆகியிருக்கின்றன. யு சர்டிபிகேட்டுடன் நாளை வெளியாகிறது நிமிர்ந்து நில்.ஜெயம் ரவிக்கு ஜோடியாக முதலில் நயன்தாராதான் நடிப்பதாக இருந்தது. ஆனால் திடீரென நடிக்க மறுத்துவிட்டார் நயன். இதற்கு அவரிடம் நடிக்க தேதிகள் இல்லை என்பது காரணமாக சொல்லப்பட்டது. நடிகை ராகிணி திரிவேதியும் ஒரு முக்கியமான காதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
இந்தப் படத்தின் கதை பற்றி “நேர்மையாக நடக்க விரும்பும் ஒருவனை சூழலும் மனிதர்களும் விடாமல் துரத்தி குறுக்கீடு செய்கிறார்கள். ஆனால் அவன் நிமிர்ந்து நிற்கிறான். தன் கொள்கையை விட்டு விலகாமல் நடக்கிறான். இதுதான் படத்தின் அடித்தளம் என்கிறார் சமுத்திரக்கனி.நிமிர்ந்து நில் கதைக்காக சமுத்திரக்கனி ரொம்ப அலட்டிக் கொள்ளவே இல்லையாம். சுமார் ஆறு மாத காலமாக பத்திரிகைகளில் வந்த செய்திகளை எடுத்து கோர்வையாக்கியிருக்கிறார். அப்போது நிமிர்ந்து நில் படத்தின் கதை கிடைத்துவிட்டதாம். முழுக்க முழுக்க உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட படம் இது.
இதற்கு முன்பு ஜெயரம் ரவி நடிப்பில் வெளியான ஆதி பகவன் படத்தில் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார் ஜெயம் ரவி. ஆனால் படம் பெரிதாக சொல்லிக் கொள்கிற மாதிரி போகவில்லை. இந்தப் படத்திலும் இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார் ஜெயம் ரவி. இந்தப் படத்தை ரொம்பவே எதிர்பார்க்கிறார் ஜெயம் ரவி. காரணம், பேராண்மை படத்திற்கு அப்புறம் கடந்த நான்கு வருடங்களில் சொல்லிக் கொள்கிற மாதிரி எந்த ஒரு ஹிட்டும் கொடுக்கவில்லை ஜெயம் ரவி. இந்தப் படமாவது ஹிட்டாக வேண்டும் என்ற அவரது எதிர்பார்ப்பு நிறைவேறுமா என பார்க்கலாம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே