சென்னை:- இயகுநர் வசந்தபாலனும் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானும் முதல் முறையாக இணையும் படம் காவியத் தலைவன்.
சித்தார்த் பிருத்விராஜ் நாசர் வேதிகா தம்பி ராமைய்யா சிங்கம்புலி மன்சூர் அலிகான் பொன்வண்னன் என மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளத்தோடு இயக்குநர் வசந்தபாலன் இப்படத்தில் களமிறங்கியுள்ளார்.
நீண்ட இடைவெளிக்குப்பின் ஒரு இளந்தலைமுறை இயக்குநருடன் இசைப்புயல் இணைந்திருக்கும் படம் இது.
படம் முழுக்க நாடகம் தொடர்பான காட்சிகள் இருப்பதால் ஒப்பனையும் இப்படத்தில் மிக முக்கியமான அங்கம் வகிக்கிறது. தென்னிந்தியாவின் மிகச் சிறந்த ஒப்பனைக் கலைஞரான பட்டணம் ரசீத் அவர்கள் இப்படத்தில் ஒப்பனைக் கலைஞராக பணி புரிந்துள்ளார்.
இப்படத்தின் கதை உருவாக்கத்திற்காக மதுரை புதுக்கோட்டை திண்டுக்கல் கரூர் என முக்கியமான நாடக சங்கங்களில் உள்ள மூத்தக் கலைஞர்களிடம் கலந்து ஆலோசித்து ஒரு வருடத்திற்கும் மேலாக கள ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
சித்தார்த்தும், பிருத்விராஜூம் முதல் முறையாக இணைந்து நடிக்கும் படம் இது.
பரதேசியில் தன் நடிப்பின் மூலம் எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைத்த வேதிகாவிற்கு இந்தப்படம் பெரும் அடையாளம்.
தமிழ் தெலுங்கு இந்தி என பரபரப்பாக இயங்கும் நீரவ் ஷா மதராஸப்பட்டிணம் படத்திற்குப்பின் ஒளிப்பதிவு செய்யும் இரண்டாவது பீரியட் படம்.
பிரபல இயக்குநர் ராம்கோபால் வர்மாவின் இந்திப்படமான சத்யா – 2 வின் கதாநாயகியான அனைக்கா சோட்டி இப்படத்தின் இன்னொரு கதாநாயகியாக தமிழில் முதல் முறையாக நடிக்கிறார்.
படம் நாடகக் கலைஞர்களின் வாழ்க்கை பற்றியதென்பதால் படம் முழுக்க நிறையன் நிஜ நாடகக் கலைஞர்கள் வேலை செய்துள்ளனர்.
கவிஞர் வாலி அவர்கள் கடைசியாக எழுதிய பாடலான ‘கிருஷ்ண விஜயம்’ பாடல் இப்படத்தில் இடம் பெற்றுள்ளது.
மறைந்த நடன இயக்குநர் ரகுராம் அவர்கள் இப்படத்தில் இரண்டு பாடல்களுக்கு நடனம் அமைத்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் இந்தப்படம் வெளியாக உள்ளது.
பரதேசி படத்தில் சிறப்பாக உடைகள் கொடுத்த பெருமாள் செல்வமும், நிரஞ்சனி அகத்தியனும் இப்படத்திற்கான நாடக உடைகளை மிகச் சிறப்பாக உருவாக்கித் தந்துள்ளனர்.
அங்காடித் தெரு வெற்றிக்குப்பின் எழுத்தாளர் ஜெயமோகன், இயக்குநர் வசந்தபாலனின் காவியத்தலைவனிலும் வசனம் எழுதியுள்ளார்.
இயக்குநர் வசந்தபாலன், இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான், பா.விஜய், தம்பி ராமைய்யா, பட்டணம் ரஷீத், எடிட்டர் பிரவீன், காஸ்ட்யூமர் செல்வம் என ஏழு பேர் தேசிய விருது பெற்ற கலைஞர்கள் இப்படத்தில் பங்காற்றியுள்ளனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி