ஆனபோதும், படிப்பை முதலிடத்தில் வைத்து விட்டு, சினிமாவை இரண்டாம் பட்சமாகத்தான் வைத்திருக்கிறார் லட்சுமிமேனன். எத்தனை படங்களில் நடித்தாலும் படிப்பை மட்டுமே விடவே மாட்டேன் என்று வைராக்கியத்துடன் படித்து வந்தவர் தற்போது ப்ளஸ்-ஒன் இறுதி ஆண்டு தேர்வு எழுதிக்கொண்டிருக்கிறார்.அதற்காக தான் நடித்து வந்த படங்களை அவசரமாக முடித்துக்கொடுத்து விட்டு, கேரளா, எர்ணாகுளத்தில் முகாமிட்டுள்ளார். அதன்காரணமாக, நேற்று முன்தினம் சென்னையில் நடைபெற்ற ஜிகர்தண்டா படத்தின் ஆடியோ விழாவுக்கு வரவில்லை லட்சுமிமேனன். ஆனால், நேற்று சென்னையில் நடைபெற்ற அப்படத்தின் பிரஸ்மீட்டிற்கு வந்திருந்தார்.
அப்போது, அவர் பேசுகையில், எனக்கு தேர்வு இருந்ததினால்தான் ஆடியோ விழாவில் கலந்து கொள்ளவில்லை என்று தெரிவித்த லட்சுமிமேனன். இன்று ஒருநாள் கேப் கிடைத்ததால், வந்திருக்கிறேன். ஆனால் என்னால் ரொம்ப நேரம் இருக்க முடியாது.நிறைய படிக்க வேண்டியதிருக்கிறது என்று சொன்னவர், இந்த படத்தில் எனக்கு வேலை கம்மிதான். ஆனால், அழகான வேடம். இதுவரை நடிக்காத வித்தியாசமான கேரக்டர் என்பதால், இந்த படத்தில் புதுமையான லட்சுமிமேனனை பார்க்கலாம் என்றார்.
மேலும், என்னதான் சினிமாவில் நான் பிசியாகிக்கொண்டேயிருந்தாலும், படிப்பை விட மாட்டேன். முதலில் படிப்பு. அதற்கு அப்புறம்தான் நடிப்பு.அதனால்தான் படிப்பை என்னை அழைத்துக்கொண்டேயிருக்கிறது என்று சொன்ன லட்சுமிமேனன். பிரஸ்மீட் நடந்து கொண்டிருக்கும்போதே, அரங்கத்திலிருந்து வெளியேறி கேரளாவுக்கு பறந்து விட்டார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே