பொதுவாக’ரஜினிகாந்த் படம் என்றாலே வசூல் சாதனை புரியும் என்பது உண்மை. அதிலும் அவர் நடித்து கடைசியாக வெளிவந்த சிவாஜி, எந்திரன் ஆகிய இரண்டு படங்களின் வசூல் தொகை தமிழ் சினிமாவில் ஒரு சாதனையாக கருதப்படுகிறது.
‘எந்திரன்’ வெளியான பிறகு கடந்த சில வருடங்களில் தமிழ் சினிமாவின் வியாபார வட்டம் மிகவும் பெருகி விட்டது. பல நாடுகளிலும் தமிழ்த் திரைப்படங்கள் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்றன.‘எந்திரன்’ திரைப்படத்திற்குப் பிறகு ஒரு சில வருடங்கள் கழித்து ‘கோச்சடையான்’ திரைப்படம் வெளிவர உள்ளதால் பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
அதிலும் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ‘மோஷன் கேப்சரிங் டெக்னாலஜி’ முறையில் இப்படம் தயாரிக்கப்பட்டுள்ளதும், கோடை விடுமுறை நாளில் படம் வெளிவர இருப்பதும் படத்திற்கு மிகவும் வசதியாக அமைந்து விட்டது.
தமிழ் மட்டுமல்லாது, ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு, மராத்தி, போஜ்புரி, பெங்காலி ஆகிய மொழிகளில் உலகம் முழுவதும் 6000த்திற்கும் மேற்பட்ட திரையரங்குகளில் படம் திரையிடப்பட உள்ளது.ஏறக்குறைய ஒரு ஹாலிவுட் திரைப்படத்திற்கு நிகராக படத்தின் வெளியீடு நடைபெற உள்ளது.அப்படியென்றால் படத்தின் வசூல் எவ்வளவாக இருக்கும்.
ஒரு தோராயமான கணக்கு…
500 இருக்கைகள் கொண்ட ஒரு திரையரங்கில் 4 காட்சிகள் வீதம் திரையிடப்பட்டால், டிக்கட் விலை 120 ரூபாய் என்ற நிலையில் ஒரு காட்சிக்கு வசூலாகும் தொகை 60000 ரூபாய். 4 காட்சிகளுக்கு 2,40,000 ரூபாய்.அப்படியென்றால் 6000 திரையரங்குகளில் ஒரு நாளைக்கு மட்டும் வசூலாகும் தொகை 144,00,00,000 கோடி ரூபாய். ஒரு வாரம் ஓடினாலே வசூலாகும் மொத்த தொகை 1008 கோடி ரூபாய்.
படத்தின் பட்ஜெட் ஒரு 300 கோடி ரூபாய் என்று வைத்துக் கொண்டாலும் 700 கோடி ரூபாய்க்கும் மேல் மொத்தமாக லாபம் வர வாய்ப்புள்ளது. மற்ற செலவுகள் போக நிகர லாபம் 500 கோடி வரை வரும்.இப்படி நடந்து விட்டால், இந்திய அளவில் வசூல் சாதனை புரிந்த ஒரே நடிகர் என்ற சாதனை ரஜினிகாந்துக்கு மட்டுமே கிடைக்கும்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே