உத்தம வில்லன் படத்தில் கமலுக்கு ஜோடியாகும் பூ பார்வதி!…

சென்னை:-விஸ்வரூபம்-2 படத்தை ரிலீஸ் செய்து விட்டுத்தான் அடுத்த பட வேலைகளில் கமல் இறங்குவார் என்று எண்ணி வந்த நிலையில், தற்போது அவரது அடுத்த படமான உத்தமவில்லன் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுவிட்டது. கமலுடன சதிலீலாவதி படத்தில் இணைந்து நடித்த ரமேஷ்அரவிந்த் படத்தை இயக்கிக்கொண்டிருக்கிறார். லிங்குசாமி இப்படத்தை தயாரிக்கிறார்.இப்படத்தில் பணிபுரியும் டெக்னீஷியன்களைப்பற்றிய தகவலை சமீபத்தில் வெளியிட்டவர்கள், படத்தில் கமலுடன் யார் யார் நடிக்கப்போகிறார்கள் என்பதை பற்றி எந்த தகவலையும் வெளியிடவில்லை.

அதனால் கமலுடன் 3 கதாநாயகிகள் நடிப்பதாக சொன்னார்களே. ஒருவர் பெயர்கூட படத்தின் அறிவிப்பில் இடம்பெறாமல் சஸ்பென்ஸ் வைத்து விட்டார்களே என்று மீடியாக்கள் புலனாய்வு செய்து கொண்டிருக்கின்றன.இந்த 3 கதாநாயகிகளும் முடிவு செயப்பட்டுவிட்டதாகவும் கூறப்படுகிறது. .காஜல் அகர்வால், தமனா,திரிஷா ஆகியோரை அணுகியதாகவும் கூறப்படுகிறது.இந்த நிலையில், தற்போது அந்த மூன்று நாயகிகள் ஒருவர் பெயர் மட்டும் வெளியில் கசிந்துள்ளது. அவர், ஏற்கனவே தமிழில் பூ, மரியான் படங்களில் நடித்த பார்வதி.

இவர் தமிழில் நடித்த இரண்டு படங்களிலுமே தன்னுடைய அருமையான நடிப்பு திறமையை காட்டி நடித்திருந்த போதிலும் அவருக்கு கோடம்பாக்கத்தில் சரியான படவாயப்புகள் இல்லை.அதன்காரணமாக மரியானுக்கு பிறகு தனது தாய்மொழியான மலையாள சினிமாவில் சில படங்களில் நடித்தவர் இப்போது பெங்களூர் டேட்ஸ் என்ற படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.இந்நிலையில், கமலுடன் நடிக்கும் வாய்ப்பு என்றதும் புதிய மலையாள படங்களை ஒத்துக்கொள்ளாமல் உடனடியாக உத்தமவில்லனுக்கு கால்சீட் கொடுத்து விட்டாராம். இப்படத்தில் மற்ற கதாநாயகிகளை விட பார்வதிக்கு முக்கியத்துவம் வாய்ந்த வேடம் கொடுக்கப்பட்டுள்ளதாம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago